Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
12
திருமணம் சில திருத்தங்களுடன் .................!

SooriyanFM Gossip - திருமணம் சில திருத்தங்களுடன் .................!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

827 Views
''திருமணம் சில திருத்தங்களுடன்'' படத்தின் First look  வெளியிடப்பட்டுள்ளது. 
சேரனின் இயக்கத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். 
 
மூன்று திரைப்படங்களுக்கான தேசிய விருதைப் பெற்ற பெருமையுடைய சேரன் இந்த திரைப்படத்தையும் இயக்குகிறார். 
 
சேரன் இயக்கிய சில திரைப்படங்கள் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கினாலும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 
 
இதற்கு சிறந்த உதாரணம் பார்த்திபன்-மீனா நடித்த பாரதி கண்ணம்மா.  
 
தொடர்ந்து பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிக் கொடி கட்டு போன்ற திரைப்படங்கள் சமூக அவலங்களை பேசுவதாக அமைந்தன. அத்துடன், இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. 
 
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சேரன் படம் ஒன்றை இயக்குவதாகக் தகவல் வெளியாகி இருந்தன. 
 
இந்த சூழலில் ''திருமணம் சில திருத்தங்களுடன்'' என்ற படத்தை சேரன் இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கிறார். காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
 
சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் சேரனும் இப்படத்தில் நடிக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
 
சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் படத்தின் First lookகை விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top