Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
சாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - "இளையராஜா-75"

SooriyanFM Gossip - சாதனை ஞானிக்காக சங்கமிக்கப்போகும் தென்னிந்தியத் திரையுலகம் - "இளையராஜா-75"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

520 Views
தமிழ்த் திரையுலகம் தலைமேல் வைத்துக் கொண்டாடும் ஒரு சாதனையாளர் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. தற்போதுவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த சாதனைக்குச் சொந்தக்காரரான இவரது பாடல்கள் இல்லாத தமிழ்த் திரையிசையை, பாதி வெறுமை என்று சொல்லலாம்.

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான "பத்ம பூஷன்" விருதுடன், தேசிய விருதை 5 முறை தனதாக்கிக் கொண்டதோடு, இதுவரைக்கும் ஐயாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை இசைத்துறைக்குத் தந்திருக்கும் இசைஞானி, தனது குரலில் பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி தனது அபிமான ரசிகர்களை வசீகரித்திருக்கின்றார். இப்படி பல சாதனைகளோடு இன்றும் திரையுலகில் இசைப்பணி செய்துகொண்டிருக்கும் இளையராஜாவுக்கு விழா எடுத்துக் கொண்டாட முடிவுசெய்திருக்கின்றார்கள் திரையுலகினர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக "இசையராஜா-75" என்ற பெயரில், ஒட்டுமொத்த இந்திய அளவில் வெகு பிரம்மாண்டமான இசைவிழா ஒன்றை ஏற்பாடு செய்து, இசைஞானியை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் சொல்கின்றது.

2019 புதுவருஷத்தின் பெப்ரவரி மாதம் 2-ம் மற்றும் 3-ம் திகதிகளில், சென்னையிலுள்ள நந்தனம் YMCA மைதானத்தில்
"இளையராஜா-75" இசைநிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளனவாம். இதேவேளை, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இளையராஜாவுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், இசை கலைஞர்கள் எனப் பெரும்பாலானோர் இந்த இசைவிழாவில் கலந்துகொண்டு இசைஞானியை பெருமைப்படுத்தவுள்ளதாகவும் விழா ஏற்பாட்டுத் தரப்பு கூறுகின்றது.

இந்தநிலையில், 2019 பெப்ரவரி 2-ம் மற்றும் 3-ம் திகதிகளில் இடம்பெறவிருக்கும் படப்பிடிப்புகள் அனைத்தையும் நிறுத்தி, திரையுலகம் சார்ந்தவர்கள் அனைவருக்கும் விடுமுறை வழங்கப்படுகின்றது. அத்துடன், குறித்த இரு தினங்களிலும் தமிழ்த் திரையுலகம் சார்ந்த அனைவரும் "இளையராஜா-75" இசைவிழாவில் பங்கேற்று, திரையுலகம் சார்ந்து விழாவை சிறப்பிக்க வேண்டுமெனவும் கோரி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top