Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
விஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்

SooriyanFM Gossip - விஜய் மல்லையா தொடர்பில் புதிய பரபரப்புத் தகவல்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

295 Views
தொழிலதிபர் விஜய் விஜய் மல்லையா தொடர்பில் புதிய புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்திய வங்கிகளில் இந்திய ரூபா பெறுமதிக்கு 9 ஆயிரம் கோடி பெறுமதிக்கும் மேலான பணத்தை கடனாக பெற்று, அவற்றை வங்கிகளுக்கு மீள செலுத்தாது கடந்த 2016ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி லண்டனில்  வாழ்ந்து வந்தார். 
 
இதன் காரணமாக, விஜய் மல்லையா  மீது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு அண்மையில் வெளியாகி இருந்தது. தீர்ப்பின்படி விஜய் மல்லையா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில், ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காகத்தான் நாட்டை விட்டு விஜய் மல்லையா 
வெளியேறினார் என்றும், மோசடி செய்து தப்பிச் செல்லவில்லை என்றும் அவரின் வழக்கறிஞர் அமித் தேசாய் அமலாக்கத்துறையினரிடம் தெரிவித்துள்ளார். 
 
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போதே  வழக்கறிஞர் அமித் தேசாய் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.
 
இதற்கு பதில் வழங்கிய அமலாக்கத்துறை வழக்கறிஞர் டி.என்.சிங், ஜெனிவா கூட்டத்தில் கலந்துக் கொள்ள சென்றவர்  எதற்காக 300 பைகளை கொண்டு சென்றார் என்று கேள்வி எழுப்பினார். 
 
இதற்கு பதில் கூறிய  விஜய் மல்லையாவின் வழக்கறிஞர், அமலாக்கத்துறை சொல்வது போன்று விஜய் மல்லையா ரகசியமாக இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை. 
 
அவர் ஜெனிவாவில் நடைபெற்ற உலக மோட்டார் விளையாட்டு கூட்டத்திற்காக தான் சென்றார். இந்த பயணம் முன்னதாக திட்டமிடப்பட்டது என்றார். 
 
இதற்கு பதில் வாதம் செய்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், விஜய் மல்லையா இந்தியா வர மறுத்து வருகிறார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்கிறார். 
 
அத்துடன், சிறையின் அமைப்பு தொடர்பான வீடியோ லண்டன் கோர்ட்டில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டும் அவர் திருப்தி அடையவில்லை என்றும் கூறினார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top