Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
17
நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற சிலர் - வெளுத்து வாங்கினார் நடிகை

SooriyanFM Gossip - நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற சிலர் - வெளுத்து வாங்கினார் நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

407 Views
தற்போது எல்லா நிகழ்வுகளுக்கும்  திரையுலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்து நிகழ்வுகளை நடத்துவது ஒரு கலாசாரமாக உருவெடுத்து வருகிறது.

இது முற்று முழுவதுமாக ஒரு விளம்பர நோக்கம். முக்கியமாக கடை திறப்பு விழா என்றால் அங்கு ஒரு சினிமாப்  பிரபலம் வருவது தற்போதைய நாட்களில் நாம்  காண்கிறோம்.  
 
இப்படித்தான் ஒரு கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகை ஷெரின் கானிடம் சிலர் தவறாக நடக்க முயன்று, அவரிடம் வாங்கி கட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. 
 
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கடை ஒன்றை திறந்து வைப்பதற்கு அழைக்கப்பட்டிருந்தார்  நடிகை ஷெரின் கான் (Zarine Khan). 
 
ஷெரின் கான் வருவது தெரிந்து அங்கு பெரும் கூட்டம் கூடியிருந்தது. கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு விட்டு ஷெரின் தனது காரில் ஏற சென்றுள்ளார். 
 
அப்போது கடை முன்பு அதிகளவிலானவர்கள் இருந்த நிலையில் அவரும் கூட்டத்தில் சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிலர் அவர் மீது கண்ட இடத்தில் தொட முயன்றுள்ளனர். 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷெரின், தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றவர்களை பிடித்து தள்ளியதுடன், சிலரை அடித்துவிட்டார். 
 
அவர் அப்படி நடந்துகொள்வார் என்று  சற்றும் எதிர்பாக்காத அவர்கள் மிரண்டுவிட்டனர். 
 
சில்மிஷம் செய்ய முயன்றவர்களுக்கு நல்ல பாடம்  புகட்டிய  ஷெரின், காரில் ஏறி அங்கிருந்து சென்றுள்ளார். 
 
அத்துடன், இந்த சம்பவம் குறித்து அவர் ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார்.இவரது துணிச்சல் மிகு செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றார்கள். 
 
இதேவேளை நான்  ராஜாவாக போகிறேன் திரைப்படத்தில் ஷெரின் கான்  "Malgove" என்ற பாடலுக்கு நடனமாடி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top