Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
மன அமைதியைப் பெற விரும்பும் அனைவரும் கட்டாயம் படியுங்கள்....

SooriyanFM Gossip - மன அமைதியைப் பெற விரும்பும் அனைவரும் கட்டாயம் படியுங்கள்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,666 Views
நம்மில் பலர் தற்காலத்தில் மன அமைதியை தொலைத்து விட்டு, நாளாந்தம் நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்கின்றனர். 

அனைத்தும் இருந்தாலும், மன அமைதி மட்டும் இல்லாத ஒரு சூழல் பலரிடம் உள்ளது.

இவ்வாறு மன அமைதியின்றி உள்ள அனைவருக்கும் ''பங்கஜ முத்திரை'' பெரிதும் உதவுகின்றது.

இந்த முத்திரையைச் செய்வது மிக சுலபமானதாகும். முதலில் மெல்லிய விரிப்பொன்றில் சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்துகொள்ள வேண்டும்.

பிறகு நெஞ்சுக் குழிக்கு நேராக (அனாகத சக்கரத்துக்கு நேராக), கைவிரல்கள் உடலில் ஒட்டாத வண்ணம், ஒரு தாமரை மலர்ந்திருப்பது போன்று, அதாவது இரண்டு கரங்களின் கட்டைவிரல்களும், சுண்டு விரல்களும் முழுமையாக ஒட்டியிருக்க, மற்ற விரல்களை எவ்வளவு முடியுமோ அவ்வளவு மலர்ச்சியாக விரித்துவைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கண்களை மூடி 30 நிமிடங்கள் வரையிலும் மெளனமாக அமர்ந்திருக்கலாம். மன இறுக்கம் உள்ளவர்கள், தாமரை மொட்டு இதழ் விரிப்பது போன்று, முதலில் கைகளைக் குவித்து வைத்து, பின்னர் மெது மெதுவாக விரல்களை விரிக்கவும். இவ்வாறு விரிக்க குறைந்தது 3 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். இப்படி, பதினான்கு தடவைகள் செய்யவும்.

தினமும் அதிகாலை வேளையில் செய்து பயனடையலாம்.

இந்த முத்திரை பயிற்சியைக் குளிர் காலங்களில் செய்வதை தவிர்க்கவேண்டும். செய்தால் நெஞ்சில் சளி கட்டும்.

முத்திரைப் பயிற்சிகள் குறைந்தது 15 நிமிடங்களும், அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரையும் செய்யலாம். குறிப்பாக 45 நிமிடங்கள் செய்தால் நோயிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

இந்தப் பயிற்சியை செய்வதன் மூலம், மனச் சலனம், வீண் கோபம், பதற்றம் ஆகியன நீங்கும். அத்துடன் முகப் பொலிவும் தேகத்தில் அழகும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top