Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
Amazon Alexa - ல் பழங்களை ஓர்டர் செய்து சாப்பிட்டு வந்த அதிசயக் கிளி

SooriyanFM Gossip - Amazon Alexa - ல் பழங்களை ஓர்டர் செய்து சாப்பிட்டு வந்த அதிசயக் கிளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,393 Views
பறவைகளில் மிகவும் சாமர்த்தியம் நிறைந்தவை கிளிகள் என்று எல்லோருக்கும் தெரியும். ஏதவாவது நாம் சொல்லி கொடுத்தால் கப்பெண்டு அதை நினைவில் வைத்து சிறிது நாட்களிலேயே பேசிவிடும்.

இதானால்கூட அநேகமானவர்கள் கிளிகளை தமது செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார்கள். 
 
இப்போது ஆப்பிரிக்காவின் ரொக்கோ என்ற கிளி ஒன்று தொடர்பில் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 
 
ஆப்பிரிக்காவின் ரொக்கோ என்ற குறித்த கிளி தன்னை வளர்க்கும் முதலாளியின் குரலில் அதுவும் Amazon Alexa வில் பேசி தனக்கு பிடித்த  பழங்கள், காய்கறிகளை ஓர்டர் செய்து வருகிறது. 
 
இந்த சம்பவம் நெடு நாட்கள் நிகழ்ந்தாலும், கிளியின் முதலாளி   அண்மையில்தான்  இப்படி ஒரு சம்பவம் நடைபெறுவதை கண்டறிந்துள்ளார். 
 
Amazon Alexa  Echo உபகரணம் மூலம் முதலாளிக்கு தெரியாமல் தினமும் பெரிய ஒரு லிஸ்ட்ரே போட்டுள்ளது. 
 
பொதுவாக ரொக்கோ கிளிக்கு அசாதாரணமான பேச்சு திறன் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கிளியின்  அசாதாரணத் திறமையே அதனை சிக்கலில் மாட்டி விட்டுள்ளது.  
 
இது சம்மந்தமான இன்னொரு சுவாரஸ்ய கதை உள்ளது. 
 
இந்த கிளி தேசிய விலங்கு நல அறக்கட்டளை சரணாலயத்திலேயே இருந்து வந்துள்ளது. அங்கும் சும்மா இருக்காது, வருவோர் போவோர் எல்லோருடனும் பேச்சு கொடுத்து வந்த கிளி, சிறிது நாட்களிலேயே அனைவரையும் கெட்ட கெட்ட வார்த்தைகளால் ஏசி அதில் மகிழ்ச்சி கண்டுள்ளது இந்த ரொக்கோ கிளி.  
 
சரணாலயத்தின் பணியாளர் எவ்வளவோ முயன்றும் அதன் கெட்ட வார்த்தைகளைத் தடுக்க முடியவில்லை. இதனால் பல சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.  
 
இதனையடுத்து இந்த ரொக்கோ கிளியை சரணாலய ஊழியர் மரியான் விஷ்நெவ்ஸ்கி என்பவர் தத்தெடுத்துக் கொண்டார்.
 
இதனால், ரொக்கோவிற்கு மேலும் ஒரு புதிய வாழ்விடம் கிடைத்தது. இதனால் மேலும்  குஷி அடைந்த அந்தக்கிளி Amazon Alexa வுடன் நட்பு பூண்டு தனக்கு என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் வீட்டுக்கே வரவழைத்து ராஜா வாழ்வு வாந்துள்ளது. 
 
இதில், ஐஸ்கிரீம்கள், வாட்டர்மெலான், உலர்ந்த திராட்சைகள் என்று ஓர்டர் செய்து வெளுத்துக் கட்டியுள்ளது.  
 
ஒருமுறை லைட் பல்ப், பட்டம் ஆகியவற்றையும் ஓர்டர் செய்திருக்கிறது. இவற்றை எதற்காக ஓர்டர் செய்தது என்று தெரியவில்லை. 
 
சமீபத்தில்தான் அமேசான் அக்கவுண்ட் வைத்திருக்கும் குறித்த கிளியின் உரிமையாளர் இதன் சேட்டைகளைக் கண்டுபிடித்துள்ளார். கிளி ஓர்டர் செய்த உணவுப்பட்டியலை பார்த்தவருக்கு ரொம்ப ஆச்சரியம். 
 
 
இனி என்ன செய்வது...... பாசமான வளர்த்த கிளி ஆச்சே. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top