Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
19
இசைஞானியை புகழ்ந்து மனம் நெகிழ்ந்த சுள்ளான் - "மாரி 2"

SooriyanFM Gossip - இசைஞானியை புகழ்ந்து மனம் நெகிழ்ந்த சுள்ளான் - "மாரி 2"Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

394 Views
தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படம் "மாரி". பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்க, காஜல் அகர்வால் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது "மாரி" படத்தின் இரண்டாம் பாகமான "மாரி 2" படமாகிக்கொண்டிருக்கின்றது. தனுஷ் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை வழங்க, சாய் பல்லவி மற்றும் ரொவினோ தோமஸ் ஆகிய நாயகிகள் இணைந்து நடிக்கும் இந்தப் படம் வெகு விரைவில் திரைகாணவுள்ளது.

இது இப்படியிருக்க, அண்மையில் "மாரி 2" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றிருந்தது. அதில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் மாரி திரைப்படம் பற்றி கூறுகையில், "எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி. எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன். மாரி நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும்.

மாரி 2 படத்தோட வெற்றிக்கு பின் பாகம் 3 பத்தி யோசிக்கணும். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார். அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம். நான் எழுதிய வரியை பார்த்து, முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் சம்மந்தமே இல்லை என்றார். பின்னர் படித்து பார்த்து பாடி கொடுத்தார்.

என் கிட்ட ஒரு சில வீடியோக்கள் இருக்கிறது அதை அப்புறம் பகிர்கிறேன். ஒரு குழந்தையாக, ஒரு பக்தனாக இளையராஜா முன்னாடி நின்ற சில நேரங்கள் என்னால் மறக்கவே முடியாது" என இசைஞானி பற்றி மனம் நெகிழ்ந்திருக்கின்றார்.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top