Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
19
தூத்துக்குடி மக்களின் இப்போதைய கனவு இதுதான் - விடிவு கிடைக்குமா?

SooriyanFM Gossip - தூத்துக்குடி மக்களின் இப்போதைய கனவு இதுதான் - விடிவு கிடைக்குமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

373 Views
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று   வலியுறுத்தி, தூத்துக்குடி மக்கள் கறுப்புக்கொடி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நீதிபதி தருண் அகர்வாலா குழுவின் பரிந்துரையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி வழங்கியது. 
 
இந்த தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த தீர்ப்பையடுத்து குறித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 
 
இதனிடையே, தமிழக அரசு மேல்முறையீடு செய்தால், தங்களது கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்பதற்காக, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை உடனடியாக தாக்கல் செய்தது. 
 
இதேவேளை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து, தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 
 
இதற்கு காவல்துறையினர் அனுமதி கொடுக்காத காரணத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 
 
இதனிடையே மேலும் சில மக்கள் வீதியில் இறங்கி கறுப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்த நிலையில், தூத்துக்குடியில் மீண்டும் போராட்டம் விரிவடையும் வாய்ப்புள்ளதால், அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக  இந்தியச்  செய்திகள் தெரிவிக்கின்றன. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top