Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
24
உடல் வலுவும் ஆரோக்கியமும் சிறக்க உடற்பயிற்சியில் சில மாற்றங்கள்....

SooriyanFM Gossip - உடல் வலுவும் ஆரோக்கியமும் சிறக்க உடற்பயிற்சியில் சில மாற்றங்கள்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

837 Views
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து அதிகாலைப் பொழுதில் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது, நடைப்பயிற்சி மேற்கொள்வது பெருமளவானோரின் தினசரி செயற்பாடுகளில் ஒன்று. இப்படி ஒரு விடயத்தை தினமும் ஒரே விதமாக செய்யும்போது அதில் ஒருவித சலிப்புத் தன்மை ஏற்படுவது வழமை. 

வழக்கமாக நாம் செய்யும் இப்படியான உடற்பயிற்சி விடயங்களில் வரும் சலிப்புத் தன்மையை இல்லாமல் செய்வதும், அதே போல உடலுக்கு மேலும் உறுதியையும், உற்சாகத்தையும் வழங்கும் விதமாக, நாம் அன்றாடம் செய்யும் சில உடற்பயிற்சிகளை கொஞ்சம் மாற்றி செய்வது எப்படி என்றும் அதனால் உண்டாகும் நன்மைகள் எவையென்றும் தெரிந்துகொள்வோமா.....???

தினமும் நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது ஏற்படும் சலிப்பு தன்மையை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜோக்கிங்கோ செய்யலாம். இதனை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது. இப்படி செய்வதனால் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெறும். ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரவும் வழிவகை செய்யும். சிந்தனை திறனை மேம்படுத்தும். மனதில் நல்ல யோசனைகள் உதிக்க உதவும். பார்வை திறன் மேம்படவும் துணைபுரியும்.

அத்துடன், பின்னோக்கி நடை பயிலும்போது கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடை பயிலுவது நல்லது. விரைவில் காயங்கள் ஆறத்தொடங்கும். நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்வதற்கும் வழிவகை செய்யும். உடல் சமநிலையில் இருக்கவும் உதவி புரியும். அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் பின்னோக்கி நடைபயில்வது பயனளிக்கும்.

இதேவேளை,நமது உடலிலுள்ள எலும்புகளும், தசைகளும் வலுப்பெறுவதற்கும் பின்னோக்கி நடைபயில்வது நல்லது. உடலின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க செய்யும். வீட்டிலேயே பின்நோக்கி நடைப்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் டிரெட்மில் எனப்படும் உடற்பயிற்சிக்கருவியை பயன்படுத்தலாம். அது சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் அமையும். முதலில் டிரெட்மில்லில் மெதுவாக நடக்க தொடங்கி பின்னர் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top