Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
''திமிங்கில வேட்டை தீவிரமடையும்''... ஜப்பானின் முடிவால் பரபரப்பு...

SooriyanFM Gossip - ''திமிங்கில வேட்டை தீவிரமடையும்''... ஜப்பானின் முடிவால் பரபரப்பு...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

280 Views
மீண்டும் திமிங்கில வேட்டையை ஆரம்பிக்கவுள்ளதாக, ஜப்பான் அறிவித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

கடந்த 25 ஆண்டுகளாக ஆராய்ச்சிப் பணிகளுக்கு என்ற போர்வையில், அண்டார்டிக், வடமேற்கு பசிபிக் கடற் பகுதிகளில் ஜப்பான் திமிங்கல வேட்டையில் ஈடுபட்டு வந்தது.

எனினும் ஜப்பான், அந்தத் திமிங்கிலங்களை ஆய்வுக்குப் பயன்படுத்தாமல், உணவுக்குக்கே பயன்படுத்தி வருவதாக, பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் திமிங்கலங்களைப் பாதுகாப்பது குறித்து சர்வதேச திமிங்கலப் பிடிப்பு ஆணையகம், வணிக ரீதியில் திமிங்கலங்களைப் பிடிப்பதை 1986 ஆம் ஆண்டு தடை செய்தது. இந்த ஆணையகத்தில் ஜப்பானும் ஒரு உறுப்பு நாடாக இருந்த நிலையில், தற்போது ஜப்பான் இந்த இந்த ஆணையகத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், வணிக ரீதியாக திமிங்கல வேட்டையில் ஈடுபடப் போவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஆனால்் ஜப்பான் தமது கடற் பகுதிகளில் மட்டும் திமிங்கிலங்களை பிடிக்கப் போவதாகவும், திமிங்கில இறைச்சி தங்கள் கலாச்சாரத்துடன் தொடர்புடையது என்றும் அறிவித்துள்ளது.

ஜப்பானின் இந்த முடிவு மிகவும் மோசமானதென, பல நாடுகள் சாடுகின்றன. அத்துடன் ஜப்பானின் இந்த தீர்மானத்தை பல நாடுகள் கண்டித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top