Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
''The accidental prime minister '' ட்ரெய்லர் - கொதிக்கும் காங்கிரஸ்

SooriyanFM Gossip - ''The accidental prime minister '' ட்ரெய்லர் - கொதிக்கும் காங்கிரஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

183 Views
இந்தியத் தலைநகர் டெல்லியில் அதிர்வலையை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் ட்ரெய்லர் ''தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் ''. 
தமிழகத்தில் ''பேட்ட'' ட்ரெய்லரிலும், மகாராஷ்டிரத்தில் ''தாக்கரே'' ட்ரெய்லரிலும் பரபரப்பாக இருக்க, தலைநகர் டெல்லியை ''The accidental prime minister ''  ட்ரெய்லர் பலத்த அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 
 
வெளியாகியுள்ள ''The accidental prime minister '' ட்ரெய்லரை பாரதீய  ஜனதா காட்சி  தனது உத்தியோகபூர்வ twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 
 
அந்த பகிர்வில், "இந்த தேசத்தைப் பத்து ஆண்டுகள் கொள்ளையடித்த குடும்பத்தின் கதையை ஆணித்தரமாக சொல்லும் படம். காங்கிரஸ் கட்சியின் அடுத்த வாரிசு தயாராகும்வரை மன்மோகன் சிங், பிரதமர் நாற்காலியை அலங்கரித்துக் கொண்டிருந்தாரா என்ன? படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லரைப் பாருங்கள். படம் ஜனவரி 11-ல் ரிலீஸ்" எனப் பதிவிட்டுள்ளது. 
 
அதுமாத்திரமின்றி பாஜக பிரமுகர்கள் பலரும் படத்தின் ட்ரெய்லருக்கு வரவேற்பு அளித்துள்ளார்கள். 
 
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியோ, இந்த திரைப்படத்தை  சிறப்புத் திரையிடல் செய்ய வேண்டும் என்றும், இந்த நாட்டை 10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரை களங்கப்படுத்தும் விதமாக ட்ரெய்லர் இருக்கிறது. ஒருவேளை சிறப்புத் திரையிடல் செய்யாவிட்டால் படத்துக்குத் தடை பெறுவோம்"  என்றும் கொதித்து வருகிறது.
 
இரண்டு தரப்புக்கள் இவ்வாறு கொந்தளிக்க படத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்திருக்கும் பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் கேர், “எவ்வித சலனமும் இல்லாமல், படத்தைப் படமாகப் பாருங்கள் என்று கூறியுள்ளார். 
 
அதுமாத்திரமன்றி, 10 ஆண்டுகள் பிரதமராக நாட்டை ஆண்டவர் தொடர்பிலான படம் என்றால் காங்கிரஸ் இதைக் கொண்டாடத்தானே வேண்டும். சஞ்சய பருவா என்ற, பிரதமரின் ஆலோசகராக இருந்தவர் பற்றித்தான் படத்தின் கதை அமைகிறது. 
 
சஞ்சய பருவாவைவிட பிரதமரை நெருக்கமாகப் பார்த்தவர்கள் யாராக இருக்க முடியும்? என்று  பேட்டியளித்திருக்கிறார்.
 
இத்தகைய சூழலில் ''தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர் '' படம் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கும் என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top