Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
28
2019 ல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதி ராஜா?

SooriyanFM Gossip - 2019 ல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதி ராஜா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

127 Views
தென் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தொடர்பில் அண்மைய நாட்களில் பெரும் பிரச்சினைகள் இருக்கும் நிலையில், புதிய ஆண்டின் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு பாரதிராஜாவை போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது பல குற்றச்சாட்டை ஏ.எல்.அழகப்பன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். அதனை தொடர்ந்து டிசம்பர் 19-ம் திகதி    தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தையும் பூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 
 
டிசம்பர் 20-ம் திகதி பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினருக்கும் விஷாலுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. 
 
இதில், விஷால், மன்சூரலிகான் உள்ளிட்டவர்கள்  காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு, அன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் விஷால் மீது 2 வழக்குகள் பதிவாகின. 
 
மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெறும் குளறுபடிகள் தொடர்பாக எஸ்.வி.சேகர் அடங்கலாக பாரதிராஜா தலைமையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். 
 
இந்த சந்திப்பின் பின்னர் குறித்த குழுவில் சென்றவர்கள் கருத்து தெரிவிக்கையில் 2019 மார்ச் மாதம் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பாரதிராஜாவை போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
 
தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டால், அவர் மீதிருக்கும் மரியாதை காரணமாக எதிர்த்து யாரும் நிற்கமாட்டார்கள். ஆனாலும் பாரதிராஜா இதற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், எங்கள் சார்பில் அவரை தலைவர் பதவிக்கு நிற்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top