ஜேர்மனியின் 4வது உலகக்கிண்ணம்.
தென் அமெரிக்கக் கண்டத்தில் கிண்ணம் வென்ற ஒரே ஐரோப்பிய அணி.
24 வருடங்களின் பின்னர் உலகக்கிண்ணத்தை தனதாக்கியது.
இப்போது ஜேர்மனி அணி உலகக்கிண்ணப் போட்டிகளில்
4 தடவை சம்பியன்
4 தடவை இரண்டாமிடம்
4 தடவை மூன்றாமிடம்.
உலகக்கிண்ண கோல் சாதனையாளர் மிரோஸ்லாவ் க்லோசேக்கு உலகக்கிண்ண வெற்றியுடன் விடை கொடுத்துள்ள அணி ஆர்ஜென்டீனிய ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தென் அமெரிக்க ரசிகர்களுக்கே கவலையைக் கொடுத்துவிட்டு (அடுத்தடுத்து பிரேசில் & ஆர்ஜென்டீன அணிகளுக்குத் தோல்வி) கிண்ணத்தோடு வெற்றியுலா புறப்பட்டுள்ளது.
கொட்செயின் 113வது நிமிட கோல் விட்டுக் கொடுக்காமல் விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த இரு அணிகளில் ஜேர்மனியை உலக சம்பியனாக்கியது.
வாழ்த்துக்கள் ஜேர்மனி.
அடுத்த உலகக்கிண்ணம் 2018இல் ரஷ்யாவில் நடைபெறும் வரை சம்பியன்கள் இந்தத் தகுதிவாய்ந்த வீரர்களே.