Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
ஆண்டின் ஆரம்பத்திலேயே தனுஷின் இரண்டு பட அறிவிப்பு

SooriyanFM Gossip - ஆண்டின் ஆரம்பத்திலேயே தனுஷின் இரண்டு பட அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

926 Views
தனுஷின் அடுத்தடுத்த 2 படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களைத் தயாரிக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ். துரை செந்தில்குமார், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் ஆகியோர் இந்தப் படங்களை இயக்குகின்றனர்.

‘செக்கச்சிவந்த வானம்’, ‘வடசென்னை’, ‘பரியேறும் பெருமாள்’, ‘சாமி ஸ்கொயர்’: விஜய் டிவியின் பொங்கல் படங்கள்
‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், அதையடுத்து அந்த நிறுவனத்துக்கே மீண்டும் படம் செய்வதாகச் சொன்ன அஜித், அதன்படி நடித்தும் கொடுத்தார். அதுவே ‘விஸ்வாசம்’.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ ஆகிய படங்களில் ‘விவேகம்’ தோல்வியைத் தழுவியது. மூன்று படங்களையும் இயக்கிய சிவாவுக்கே மீண்டும் ‘விஸ்வாசம்’ படத்தின் வாய்ப்பை வழங்கினார் அஜித்.

தற்போது படம் முடிவடைந்து, பொங்கல் வெளியீடாக வருகிற 10-ம் தேதியன்று ரிலீசாகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு சத்யஜோதி ஃபிலிம்ஸ் இரண்டு படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு படங்களிலும் தனுஷ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். தனுஷின் 34-வது படத்தை, ‘கொடி’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

இதன்பிறகு தனுஷ் 35-வது படத்தின் வேலைகள் ஆரம்பமாகின்றன. இந்தப் படத்தை ராம்குமார் இயக்குகிறார். சமீபத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘ராட்சசன்’ படத்தின் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top