Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
தேடப்பட்ட தளபதி பலியானார் - உறுதி செய்தது அமெரிக்கா .

SooriyanFM Gossip - தேடப்பட்ட தளபதி பலியானார் - உறுதி செய்தது அமெரிக்கா .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

801 Views
அமெரிக்க கடற்படையை சேர்ந்த ‘யுஎஸ்எஸ் கோல்’ என்கிற போர்க்கப்பல் கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர்  மாதம் 12 ஆம் திகதி யேமன் அருகே பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்தது.

ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக யெமனில் உள்ள ஏடன் துறைமுகத்துக்கு சென்றது. அதன்படி அங்கு கப்பலில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து கொண்டிருந்தன .

அந்த சமயம் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் 2 பேர் வெடிகுண்டு நிரப்பப்பட்ட படகை செலுத்தி வந்து, ‘யுஎஸ்எஸ் கோல்’ கப்பலின் மீது மோதினர். இதனை அடுத்து பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின.

இதில் கப்பலின் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் குண்டுவெடிப்பில் சிக்கி கப்பலில் இருந்த கடற் படைவீரர்கள் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். அத்தோடு, 39 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு அல்-கய்தா பயங்கரவாத இயக்கம் உரிமை கோரியது. தாக்குதலுக்கு யேமனில் உள்ள அல்-கொய்தா பயங்கரவாத தளபதியான ஜமால் அல்-படாவி என்பவர் மூளையாக செயல்பட்டவர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்கா காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்தாக்குதலில் ஜமால் அல்-படாவி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின. இது குறித்து அமெரிக்கா உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனினும் தற்போது அந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top