சீனாவின் ஹார்பின் நகரில் 35 வந்து வருடமாக பாரம்பரிய பனி திருவிழா நடைபெற்று வருகிறது. பூங்கா அலங்கரிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தில் வண்ண அலங்காரங்களால் ஜொலிக்கும் பனி சிற்பங்கள் மற்றும் பனி மாளிகைகளை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள் இந்த நிகழ்வில் எல்லோராலும் ஆர்வமாக பார்க்கும் ஒரு விடயம் ஸ்கேட்டிங் பென்குயின் வீரர்கள்.
சர்வதேச உறைபனி மற்றும் பனிச்சிற்பத் திருவிழாவையொட்டி, உறைபனியில் உலவும் பென்குயின்களை சாய்தள பனிக்கட்டி பாதையில் விடப்பட்டன. மேலிருந்து கீழாக, அவை வழுக்கியபடி சென்றன.
இந்த பென்குயின் ஸ்கேட்டிங் விளையாட்டைப்பார்க்க அதிகளவானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
பனிச்சிற்பத் திருவிழாவை பிரபலப்படுத்தவே ஸ்கேட்டிங் பென்குயின்கள் பயன்படுத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்