Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்தில் திறக்கும்படி வெளியாகியது தீர்ப்பு

SooriyanFM Gossip - ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்தில் திறக்கும்படி வெளியாகியது தீர்ப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

72 Views
இந்தியாவின் தூத்துக்குடி பகுதியில் இயங்கி வரும் ‘ஸ்டெர்லைட் ஆலை’யால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவதாக கூறி, அங்கிருக்கும் மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார்கள்.

 

கடந்த வருடம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மிகப்பெரிய அளவில் நடந்த 100-வது நாள் போராட்டத்தில், வன்முறை வெடித்ததால் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் 14 பேர் பலியாகியதுடன், நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர்.

நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஆலையை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குழுமம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு மாநில பசுமைத் தீர்ப்பாயமும் ஆலைக்கான அனுமதியை ரத்து செய்தது. இதை எதிர்த்தும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதானந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய நிபுணர் குழுவை நியமித்தது. குறித்த நிபுணர் குழுவினர் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு பற்றியும் ஆய்வு நடத்தினர். 

பின்னர் தூத்துக்குடியிலும், சென்னையிலும் பொதுமக்கள் கணிப்பு பெறப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருவேறான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நிபுணர் குழுவின் இந்த அறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதத்தை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்து விட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியை எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. தனியார் சார்பிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்று இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு, தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்து விட்டனர். 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த நிபந்தனைகளை 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நிறைவேற்ற முன்வர வேண்டும். நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்ட பின்பு ஆலையை திறக்க விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்பு ஆலையை திறக்க மாநில பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை 3 வாரத்தில் திறக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி எதையும் வழங்கவில்லை, தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும் என்று மட்டுமே உத்தரவிட்டு இருப்பதாக, இந்த வழக்கில் முன்னிலையான தமிழக அரசின் வழக்கறிஞர் ராகேஷ் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top