Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
Facebookலிருந்து தகவல்கள் திருடப்படுகின்றனவா? ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்!

SooriyanFM Gossip - Facebookலிருந்து தகவல்கள் திருடப்படுகின்றனவா? ஆய்வில் அதிர்ச்சிகர தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

421 Views
ஃபேஸ்புக் சேவையில் கணக்கு வைத்திருக்காத பயனர்களின் விபரங்களும் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர், பயன்படுத்தாதோர் மற்றும் தளத்திலிருந்து வெளியேற்றம் செய்தோரின் தகவல்களை ஃபேஸ்புக் டிரக் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. Facebook Software Development Kit-SDK எனும் மென்பொருள் மூலம் பயனர் விபரங்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்கிவருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த Software Development மூலம் குறிப்பிட்ட இயங்குதளத்திற்கு ஏற்ப புதிய செயலிகளை உருவாக்கமுடியும். இந்த ஆய்வுக்கென ஆராய்ச்சியாளர்கள் Android இயங்குதளத்தில் 34 செயலிகளை தெரிவுசெய்தனர். இவை ஒவ்வொன்றும் 10 முதல் 50 கோடி பேர் பதிவிறக்கம் செய்த செயலிகளாகும். இவற்றில் மொழி கற்றுக் கொள்ளும் செயலி, பயணம், உணவகம் மற்றும் பல்வேறு இதர பலன்களை வழங்கும் செயலிகளையும் தேர்வு செய்தனர்.

மேலும், இந்த செயலிகள் ஃபேஸ்புக் எஸ்.டி.கே. மூலம் எவ்வாறான தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்பதை ஆய்வு செய்தனர். அனைத்து செயலிகளும் கடந்தவருடம் (2018) ஒகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜெர்மனியில் நடைபெற்ற கணினியியல் நிகழ்வில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இவ் ஆய்வறிக்கையின்படி 61 சதவிகித செயலிகள், பயனர் தங்களது ஸ்மார்ட்தொலைபேசியில் செயலியை திறந்ததும் அவர்களின் விபரங்கள் தானாக ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பயனர் ஒவ்வொரு முறை செயலியை திறக்கும் போதும் அவரது தகவல் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுகின்றது.

இந்நிலையில், பயனர் ஃபேஸ்புக் கணக்கு வைத்திருந்தாலும், வைத்திருக்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக் உள்நுழைவு (Facebook login) செய்திருந்தாலும் அல்லது ஃபேஸ்புக் உள்நுழைவு செய்யவில்லை என்றாலும் பயனர்களின் விபரங்கள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top