Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
10
ராகுல் காந்தி கூறிய கருத்து பெண்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் ஏன் பார்க்க வேண்டும்?

SooriyanFM Gossip - ராகுல் காந்தி கூறிய கருத்து பெண்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் ஏன் பார்க்க வேண்டும்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

241 Views
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று ராகுல் காந்தி விமர்ச்சித்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியினர் ராகுல் மீது வெறுப்பான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஊடகவியாளர்கள் மத்தியில் நடிகர் பிரகாஷ் ராஜ், ராகுல் காந்தி பெண்களை மதிப்பவர் என்று கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி பாராளுமன்றத்துக்கு வந்து பதிலளிக்காமல் ஒரு பெண்ணின் (ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்) பின்னால் மறைந்துகொண்டு அவரை பதிலளிக்க வைத்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கருத்து வெளியிட்டு இருந்தார்.

இந்த விடயம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியப் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்திருந்தார். இதனிடையே ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை பாலின பாகுபாடாக ''பெண்'' என்று பிரித்துப் பேசிய ராகுல் காந்திக்கு ''மகளிர் தேசிய மகளிர் ஆணையம்'' இன்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெங்களூர் மேற்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் பிரகாஷ்ராஜை டெல்லியில் வைத்து சந்தித்த ஊடகவியலாளர்கள், நிர்மலா சீதாராமன் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த பிரகாஷ்ராஜ், ராகுல் காந்தி பெண்களுக்கு எதிரானவரல்ல என்று தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் குழுவின் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கையான அப்சரா ரெட்டியை ராகுல் காந்தி நியமித்திருப்பது அவர் பெண்களுக்கு எதிரானவர் என்று கூற முடியாது என்றவர், ராகுல் கூறிய கருத்தை பெண்களுக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? என்றும் பிரகாஷ் ராஜ் கேள்வி கேட்டிருந்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top