Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
ரஹாப்க்கு அடைக்கலம் வழங்கியது கனடா

SooriyanFM Gossip - ரஹாப்க்கு அடைக்கலம் வழங்கியது கனடாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

471 Views
பெற்றோர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு நாட்டை விட்டு தப்பி வந்த சவுதிய பெண் ரஹாப் மொகமது அல் குனானுக்கு, கனடா அடைக்கலம் கொடுத்துள்ளது.
குறித்த பெண்ணுக்கு கடந்த வாரம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ அடைக்கலம் கொடுக்க தயாராக இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று கனடாவில் அவருக்கான அடைக்கலம் வழங்கப்பட்டமையால் அவர் கனடாவிற்கு சென்றுள்ளார். கனடா சென்ற ரஹாப் மொகமது அல் குனானை வரவேற்ற கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் கிரிஸ்டியா கூறும்போது, “இவர்தான் ரஹாப் கனடாவின் தைரியமான குடிமகள்” என்று தெரிவித்தார்.

ரஹாப்புக்கு அடைக்கலம் அளித்த சிறப்பு மிகு செயலை செய்தமையால் கனடா அரசாங்கத்தை சர்வதேசப் பெண்கள் நல அமைப்புகள் பாராட்டியுள்ளன. யாரிவர் ரஹாப் மொகமது அல் குனான் ? 18 வயது நிரம்பிய ரஹாஃப் மொகமது அல் குனான் குவைத்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி, தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெற்றோர் கொடுமைப்படுத்தியதாகக் கூறினார்.

குடும்பத்தினரிடம் இருந்து தப்பிய ரஹாஃப், ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்து இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் வந்தடைந்தபோது சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்ததாகவும் அவரின் பயண ஆவணங்களைப் அவைகள் கையகப் படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹாஃப், ''குவைத்துக்கு என்னை நாடு கடத்துவதற்காக குவைத் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்ப முடிவு செய்திருக்கின்றனர் என்றும், தன்னை நாடு கடத்தும் செயற்பாட்டை நிறுத்துமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை விடுத்தவர், தாய்லாந்து காவல்துறையினர் எனக்குப் புகலிடம் அளிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மனிதத்தோடு எனக்கு உதவுமாறு கேட்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.

இதனை சர்வதேச செய்தி நிறுவனமான AFP செய்தி நிறுவனமும் உறுதி செய்தது. இதனிடையே அப்பெண்ணின் தந்தை அப்பெண்ணை திரும்ப அனுப்பி வைக்கும்படி கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு அவர் அவுஸ்டேலியா செல்ல திட்டமிட்டிருந்தாலும், அவருக்கு கனடா அரசாங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளது.

இதனிடையே, ”புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்போது, அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது” என ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top