Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
14
சிறுமியின் காரசாரக் கேள்வி - திக்கு முக்காடிய ராகுல்

SooriyanFM Gossip - சிறுமியின் காரசாரக் கேள்வி - திக்கு முக்காடிய ராகுல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

360 Views
இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி டுபாய்க்கு இரண்டு நாள் பயணமாகி இருந்தார். இந்த பயணத்தில் டுபாய் நாட்டுத் தலைவர்கள் மற்றும் அங்கு வசிக்கும் இந்தியர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக ஒரு மாபெரும் கூட்டத்தில் ராகுல் உரையாற்றினார். கூட்டத்தின் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி , ‘‘இந்தியா சிறப்பான எதிர்காலத்தை பெறவில்லை, இந்தியாவில் மதவாதம் அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, இந்த நிலையை மாற்றும்’’ என கூறினார். இதன்போது 14 வயது தமிழ்ச் சிறுமி ஒருவர், ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்க கை உயர்த்தி கேள்வி கேட்க ஆயத்தமானார்.

இதைப் அவதானித்த ராகுல் அவரிடம் மைக்கை கொடுக்கும்படி கூறினார். இதன் போது குறித்த சிறுமி, ‘‘இந்தியாவில் மதவாதம் அதிகரித்து விட்டதாக கூறும் நீங்கள், குஜராத் தேர்தலின்போது ஏன் கோயிலுக்கு சென்றீர்கள்?’’ என கேட்டார். இதற்கு பதிலளித்த ராகுல், ‘‘அனைத்து மதத்தினரும் சமம் என்பதை காட்டவே நான் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறேன்’’ என்றார்.

சிறுமி கேட்ட மற்றொரு கேள்வி ராகுலை மிரள வைத்து விட்டது. ‘‘சுதந்திர இந்தியாவில் 80 சதவீத ஆண்டு காலம் காங்கிரஸ்தான் ஆட்சி செய்தது. அப்போது செய்யாத நன்மையை, நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்களா? மோடி பிரதமரான பின்புதான், வெளிநாடுகளில் வசிக்கும் எங்களை போன்றோருக்கு அங்கீகாரம் கிடைத்தது. எனவே, நீங்கள் மதவாதம் பற்றி பேசாமல், ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என கூறுங்கள் அப்போதுதான் இந்திய மக்கள் சிந்திப்பார்கள்’’ என்று குறித்த சிறுமி கேள்விக்கணைகளை தொடுத்திருந்தார்.

இந்த சம்பாஷணை ராகுல் காந்திக்கு பெரும் தர்ம சங்கடத்தை உருவாக்கி இருந்தது. இதனிடையே, துபாயில் உள்ள பாஜ ஆதரவாளர் ஒருவர் தனது மகளிடம் சொல்லிக் கொடுத்து இப்படியான கேள்விகளை கேட்டதுபோல் இந்த நிகழ்ச்சி அமைத்துள்ளது என்று விமர்சிக்ககப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்ப குழு இந்நிகழ்ச்சியின் நேரலையை ஒளிபரப்பு செய்து வந்த நிலையில் குறித்த சிறுமி கேள்விகளை காரசாரமாக கேட்டதும் உடனடியாக நேரலை ஒளி பரப்பு நிறுத்தப்பட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top