Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
கோவிலுக்கு வரும் கரடிகள் ; படபடப்பில் மக்கள்

SooriyanFM Gossip - கோவிலுக்கு வரும் கரடிகள் ; படபடப்பில் மக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

795 Views
நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது . இதற்குக் காரணம் மனிதர்கள் தானாம், அதாவது வனப்பகுதிக்கு உட்பட்ட இடங்களில் கட்டிடங்களை கட்ட ஆரம்பித்துவிட்டதால், விலங்குகள் காட்டிலிருந்து ஊருக்குள் உணவு தேடி வர ஆரம்பித்துவிட்டன. 
குறிப்பாக தேயிலைத் தோட்டப்பகுதிகளுக்குள் மட்டும் புகுந்து அட்டகாசம் செய்து வந்த கரடிகள், இப்போதெல்லாம் தைரியமாக, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் புகுந்து சேட்டை செய்ய ஆரம்பித்துள்ளதாம்.குறிப்பாக இரவு வேளைகளில்த் தான், இவைகளின் அட்டகாசம் உச்சமாம்.

பூட்டியிருக்கும் கடைகளை அடித்து நொறுக்கி, உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டு ,சாதுவாக செல்கிறதாம் .அதிலும் முக்கியமாக ,கோவில்கள் கண்ணில் தென்பட்டால் ,கரடிக்கு செம கொண்டாட்டமாம் .ஏனெனில் அங்கு ஏற்றி வைத்திருக்கும் விளக்குகளில் உள்ள எண்ணெயை மொத்தமாக குடிக்கத்தானாம். 

ஒரு நாள் பதிவான சம்பவம் இது ,கோவில்க் கதவு பூட்டப்பட்ட நிலையில், கரடி கோவிலுக்குள் நுழைகிறது. பூட்டியிருந்த கதவின் பூட்டை உடைக்க படாதபாடு படுகிறது.அவரால் முடியவில்லை.
பின் சாமி சிலை உள்ள மாடத்தில் ஏறிக் கொள்கிறது. அங்கிருந்த எண்ணெயை உறிஞ்சிக் குடிக்கிறது. பிறகு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய்ப் போத்தலைத் திறந்து குடித்து விட்டு ஒரு பெரிய சத்தத்தை எழுப்பி கொண்டே கோயிலுக்குள் இங்குமங்குமாக உலாத்துகிறது.

என்ன ஒரு பெரும் சத்தம்? இது ஏப்பமா, அல்லது சந்தோஷச் சத்தமா எனத் தெரியவில்லை. ஆனால் சத்தத்தைக் கேட்டதும் ஊர் மக்களே எழுந்து வந்துவிட்டார்களாம். என்னடா எனப் பார்த்தால், கரடி, நடை பயிலுகிறதாம் கோவிலைச் சுற்றி.எப்படி இருக்கும் ???

மக்கள் இப்போதெல்லாம், பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் , இதற்கு ஒரு நல்ல முடிவை விரைவில் எடுக்கும் படியும் வலியுறுத்தியுள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top