Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்

SooriyanFM Gossip - முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,972 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ படத்துக்கு பிறகு ‘பேட்ட’ படம் திரைக்கு வந்துள்ளது. சமீபத்தில் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய அவர் தற்போது புதிய படத்தில் நடிக்க தயாராகிறார் என்றும், அந்தப் படத்துக்கான கதைகளை கேட்பதற்கும் ஆயத்தமாகி விட்டாரென்றும் செய்திகள் வந்தவண்ணமுள்ளன. 
ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

முந்தைய படங்களான ரமணாவில் லஞ்சத்தையும், ‘கத்தி’யில் விவசாயிகள் பிரச்சினைகளையும், ‘சர்கார்’ படத்தில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார். அவரது மற்ற படங்களும் வெவ்வேறு கதை களங்களில் இருந்தன. தற்போது ரஜினி நடிக்க உள்ள படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது.

இந்த படத்துக்கு ‘நாற்காலி’ என்று தலைப்பு வைக்க ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. பேட்ட படத்தில் ரஜினியின் இளமை தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. புதிய படத்திலும் அவரை இளமையாகவே காட்ட முருகதாஸ் திட்டமிட்டு உள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க கதாநாயகிகள் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது கீர்த்தி சுரேசை தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பேசப்பட்டது. தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் அவர் இப்போது ரஜினிக்கும் ஜோடியாகிறார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top