Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
16
தேர்தலில் தோல்வியடைந்த தெரசா மே பதவியை தக்கவைத்து கொள்வாரா ?

SooriyanFM Gossip - தேர்தலில் தோல்வியடைந்த தெரசா மே பதவியை தக்கவைத்து கொள்வாரா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

548 Views
பிரெக்ஸிட் (brexit ) விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் தெரசா மேயின் கட்சியினர் 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் முடிவு செய்யும் பொதுவாக்கெடுப்பு கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின்போது அதிகமானவர்கள் பிரித்தானியா ஐரோப்பிய யூனியிலிருந்து வெளியேறவேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர்.

பிரித்தானியாவின் இந்த வெளியேற்ற முடிவுதான் பிரக்ஸிட் எனக் குறிப்பிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான விதிகளை வகுக்கவில்லை என கூறப்படுகிறது.

முன்னதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்திய பிரதமர் தெரசா மே, பிரெக்ஸிட்டை நடைமுறைப்படுத்த தேவையான விதிகளை விரைந்து வகுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தோல்வி அடைந்தால், அது மன்னிக்க முடியாத நம்பிக்கை மீறல் என்றும் தெரசா மே கூறி இருந்தார்.

இந்நிலையில், பிரக்ஸிட் மீதான பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தெரசா மேயின் தரப்பு படுதோல்வி அடைந்தது. 432 பேர் பிரக்ஸிட்டுக்கு எதிராகவும் 202 பேர் பிரக்ஸிட்டுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றார்கள்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒரு ஆளும் கட்சி அடைந்த மோசமான தோல்வியாக இது அமைகின்றது. இந்தத் தோல்வி குறித்து தெரசா மே கருத்து தெரிவிக்கும்போது, ''இந்த வாக்கெடுப்பின் முடிவு, நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

நாடாளுமன்றம் எடுத்த இந்த முடிவை அரசாங்கம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறதா? என்பதை நாங்கள் உறுதி செய்யத் தேவை இருக்கிறது'' என்றார். இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ''ஜெர்மி கார்பின் '' தெரசா மே அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். பிரிட்டன் வெளியேற்றத்துக்கான காலம் நிறைவடைய இன்னும் 10 வாரங்களே உள்ள நிலையில் தெரசா மே அரசுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top