மசாசோ நோனாக்கா மரணிக்கும் போது, அவருக்கு 113 வயதாகும். திடீரென உடல் நலகோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மசாசோ நோனாக்கா சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசாசோ நோனாக்கா, 1905 ஆண்டு, ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹொக்கைடோ தீவில் உள்ள பெரிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
நான்கு தலைமுறைகளை பார்த்த மசாசோ நோனாக்கா, கடந்த ஆண்டு தனது 112 ஆவது வயதில் உலகின் மூத்த மனிதராக கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டார். மசாசோவுக்கு 6 சகோதரர்களும், 1 சகோதரியும் உள்ளனர். மசாசோ 1931 ஆம் ஆண்டு, ஹட்சுனோ என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், மசாசோ நோனாக்கா, உடல்நலக் குறைவால் நேற்று மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் உத்தோயோகப்பூர்வமான அறிவித்தனர்.
எனினும் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.