Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
மலையுச்சியில் இருந்து போஸ் கொடுத்த மொடல் அழகி, உடலமாக மீட்பு.

SooriyanFM Gossip - மலையுச்சியில் இருந்து போஸ் கொடுத்த மொடல் அழகி, உடலமாக மீட்பு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,245 Views
மொடல் அழகி ஒருவர், மலையுச்சியில் மீது ஏறி, புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது, பள்ளத்தில் தவறி வீழ்ந்து பலியானதாக செய்தியொன்று வெளிவந்துள்ளது.

தாய்வானைச் சேர்ந்த பெண் கிகி வூ என்ற 36 வயதான பெண்ணே சம்பவத்தில் பலியானார். தன்னைப் போன்ற மொடல் அழகிகள் மத்தியில், தனித்துவம் பெற்று விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில், விநோத பழக்கம் ஒன்றை இவர் பின்பற்றி வந்துள்ளார்.

உயர்ந்த மலை மீது ஏறி அங்கு நீச்சல் உடையில் புகைப்படங்களை எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஓர் வினோத பழக்கம் இருவருக்கு நீண்ட காலமாக இருந்துள்ளது. மலை மீது ஏறும் போது மலையேற்ற உடையுடன் ஏறும் இப்பெண், மலையின் உச்சிக்கு சென்றதும் அங்கு நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு, புகைப்படம் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் வழக்கம் போல் பெண் கிகி வூ, புகைப்படம் எடுப்பதற்காக தாய்வானிலுள்ள யுஷான் தேசியப் பூங்காவின் மலைக் குன்றின் மீது ஏறிய போது, எதிர்பாராத விதமாக தவறி பள்ளத்தில் விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் கிகி வூ , தன்னுடைய சாட்டிலைட் போன் மூலம் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து பெண் கிகி வூவின் நண்பர்கள் விரைந்து காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்த மீட்புப்படையினர் உடனே சம்பவ இடத்திற்கு வந்து, வூவை தேடியுள்ளனர். இரண்டு நாட்களாக தேடியும் அவர் கிடைக்கவில்லை. மோசமான வானிலை காரணமாக அவரை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை அவரது சித்தாந்த உடலத்தை மீட்புப் படையினர் கண்டறிந்து மீட்டுள்ளனர். பெண் கிகி வூவின் உடலம் மலையுச்சியில் இருந்து, சுமார் 100 அடி பள்ளத்தில் கிடந்ததால், அதனை மீட்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், பெண் கிகி வூவின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக, தாய்வான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top