Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
23
சிக்கலில் சிக்கிய 'இளையராஜா 75' - நீதிமன்றம் சென்றது வழக்கு.

Sooriyan Gossip - சிக்கலில் சிக்கிய 'இளையராஜா 75' - நீதிமன்றம் சென்றது வழக்கு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

324 Views
நீதிமன்றங்களில் விதவிதமாக வழக்குத் தொடுப்பதில் சிலருக்கு அப்படி என்ன இன்பம் உள்ளதோ தெரியவில்லை. பல பல கோணங்களில் சிந்தித்து நூதன வழக்குகளை தாக்கல் செய்வதில் நம்மவர்களை அடித்துக்கொள்ள யாருமே இல்லை எனலாம். சிலர், பிரதிவாதிகளிடமிருந்து பலனை எதிர்பார்த்து வழக்குகளை தாக்கல் செய்வார்கள். ஆனால், இப்போது பலர் தம்மைப் பற்றி பொதுவெளியில் பலரும் பேச வேண்டும், தாம் பிரபலமாக வேண்டும் என்ற கோணத்தில் வழக்குகளை பதிவு செய்து நீதிமன்ற நேரத்தையும் கூட வீணடிக்கிறார்கள் என்பது தான் பொதுவான கவலை.

மக்கள் கவலை இப்படியிருக்க, சென்னையில் 'இளையராஜா 75' எனும் மிகப் பிரம்மாண்டமான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தை இப்படி ஒரு கவலை தற்போது சூழ்ந்திருக்கின்றது. காரணம், சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனு.

அந்த மனுவை தாக்கல் செய்துள்ள தயாரிப்பாளர் சதீஸ்குமார் தனது மனுவில் "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். இந்த சங்கம், ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முன்னேற்பாட்டுப் பணிகளுக்காக தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சுமார் 1 கோடி ரூபா வரை செலவு செய்துள்ளனர். இந்த நிதி எவ்வாறு கிடைத்தது என்பது தெரியவில்லை. அத்துடன், இந்த நிகழ்ச்சி மூலம் சுமார் 7 கோடி ரூபா வரை வருமானம் கிடைக்கும் என்று சங்கத்தின் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டாலும், அதற்கு உறுதியான திட்டம் அவர்களிடம் இல்லை.

தற்போது உள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதியுடன் நிறைவடைகின்றது. எனவே, ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால், குறித்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் என்று அவர்களால் கூறப்படும் 7 கோடி ரூபாவை முற்கூட்டியே வைப்பிடுவதற்கு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட வேண்டும். அவ்வாறு இந்த பணத்தை வைப்பீடு செய்யாமல் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, குறித்த மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 28ம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அத்துடன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்ற கட்டளை ஒன்றை அனுப்புமாறு நீதிமன்றத் பதிவாளருக்கு உத்தரவிட்டிருக்கின்றார் நீதிபதி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top