Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
24
16 பேரின் உயிரைக் காவுகொண்ட லசா காய்ச்சல் குறித்து, புதிய ஆய்வு.

SooriyanFM Gossip - 16 பேரின் உயிரைக் காவுகொண்ட லசா காய்ச்சல் குறித்து, புதிய ஆய்வு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

927 Views
நைஜீரியாவில் மிக வேகமாக பரவி வரும் லசா காய்ச்சல் காரணமாக இதுவரையில் 16 பேர் பலியானதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், இந்த காய்ச்சல் குறித்த ஆய்வொன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல் கடந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கியது. இதன்காரணமாக ஏற்கனவே 171 உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த நோய் தற்போது நைஜீரியாவில் மீண்டும் பரவி 16 பேரின் உயிரைக் காவுகொண்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது லசா காய்ச்சலால் 26.7 சதவிகித இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 60 பேர் லசா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் நைஜீரியாவின் 36 மாநிலங்களிலுள்ள ஏழு இடங்களிலும், அபுஜாவின் தலைநகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதற்குரிய நடவடிக்கைகளை நைஜீரிய சுகாதார அதிகாரிகள், உலக சுகாதார அமைப்பு மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

லசா எனும் பெயர் வடக்கு நைஜீரியாவின் லசா நகரத்திலிருந்து வந்ததாகும். இந்நோய் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் நைஜீரிய மருத்துவர்கள் தற்போது லசா காய்ச்சலை இல்லாதொழிக்க புதிய ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top