தமிழ் சினிமாவில், நகைச்சுவை நடிகர்களின் ‘மார்க்கெட்’ நிலவரம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது. தங்கவேல், நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், சந்தானம், சூரி என ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒருவர் உச்சத்தில் இருக்கிறார். அதன்படி இப்போது, யோகி பாபு. இவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா படங்களிலும் ஒரு சின்ன காட்சியிலாவது இவருடைய ‘தலை’ தெரிகிறது.
இந்தளவுக்கு புகழ் பெட்ரா யோகி பாபு, தனது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான அனுபவதி பற்றி மனம் திறந்தார்.
கடந்த காலங்களில், சென்னை நகரில் நிறுத்தி வைத்திருக்கும் கார்களையும், 2 சக்கர வாகனங்களையும் தீவைத்து எரித்துக் கொண்டிருந்த ‘சைகோ’ ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிக்கொண்டிருந்தனர்.
நான் ஒரு நாடகத்தில் நடித்து விட்டு, நள்ளிரவில் நடந்தே வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தேன். சந்தேகத்தின் பேரில் என்னை போலீசார் விசாரித்தார்கள். நான் சொன்னதை போலீசார் நம்பவில்லை. பளார் என்று ஒரு போலீஸ்காரர் முதலில் அடித்தார். இன்னொரு போலீஸ்காரர் காது நரம்புகள் செயல்படாத அளவுக்கு ஓங்கி ஒரு அடி விட்டார். ரொம்ப நேரம் பிடித்து வைத்துக் கொண்டு நம்பிக்கை வந்த பின் விடுதலை செய்தார்கள்.
அந்த ஒரு சம்பவத்தை எனது வாழ்நாளில் எப்போதும் மறக்கவே முடியாது என, யோகி பாபு தெரிவித்துள்ளார்.