Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
29
பிரசார நடவடிக்கையை ஆரம்பித்த கமலா ஹாரிஸ்

SooriyanFM Gossip - பிரசார நடவடிக்கையை ஆரம்பித்த கமலா ஹாரிஸ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

442 Views
இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் எதிர்வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை, தனது சொந்த ஊரான ஓக்லாந்தில் ஆரம்பித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 54 வயதுடைய கமலா ஹாரீஸ் அமெரிக்க தேர்தலில் தனது பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த 21-ம் திகதி வெளியிட்டு இருந்தார். குறித்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்த 24 மணிநேரத்தில், அவரது தேர்தல் பிரச்சாரத்துக்காக சுமார் 38 ஆயிரம் பேர், கிட்டத்தட்ட 33 கோடி இலங்கை ரூபா அளவில் நன்கொடை வழங்கினார்கள்.

கமலா ஹாரிஸ், முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவரது விமர்சனத்தில் முக்கியமாக ட்ரம்ப் கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமைக் கொள்கை, மெக்ஸிகோ சுவர் விவகாரம், வரிவிதிப்புக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து செனட் சபையில் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது முதலாவது உரையைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் பிறந்த ஊரான ஓக்லாந்து சிட்டி ஹாலில் வழங்கி இருந்தார். இந்த பிரசார கூட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை இருந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு அவர் உரை ஆற்றுகையில், 30 ஆண்டுகளுக்கு முன்னால் அரசு வழக்கறிஞராக எனது பணியைத் நான் ஆரம்பித்தேன். எனது முதலாவது நீதி மன்றபிரவேசத்தின் போது முதன்முதலாக நீதிமன்றத்துக்குச் செல்லும்போது ஐந்து வார்த்தைகளைக் கூறினேன். அந்த ஐந்து வார்த்தைகள் என்னுடைய வாழ்க்கை முழுவதுமான பணியை வழிநடத்துகிறது. அந்த வார்த்தைகள் , கமலா ஹாரிஸ் மக்களுக்காக! (Kamala Harris, for the people) என்பதுதான்'' என்றார்.

அவர் உரையாற்றி கொண்டிருந்த போதே அவர் பேசிய Kamala Harris, for the people என்ற வார்த்தைகள் திரையில் பெரிதான விரிந்தன. இதனிடையே கமலா ஹாரிஸ் தனது 2020 தேர்தல் முழக்கமாகவும் இதே வார்த்தைகளைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்ப்பின் மெக்ஸிகோ சுவரை, அவரின் இடைக்கால தற்பெருமைக்கான திட்டம் என்று விமர்சித்த கமலா, தற்போது அமெரிக்கர்கள் அனைவரும் மாற்றத்துக்கான புள்ளியில் இருப்பதாகவும் அமெரிக்க ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பகிரங்க குற்றச் சட்டை முன்வைத்தார்.

தனது உரையைத் தொடங்கும் முன், தன்னுடைய தாய் சியாமளா கோபாலன் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் சில நெகிழ்வான கருத்துக்களை பதிவு செய்திருந்தார். என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார். வெறுமனே உட்கார்ந்து எதைப் பற்றியாவது புகார் சொல்லிக் கொண்டிருக்காதே, எதையாவது செய் என்பார். அது எனக்கு உத்வேகம் அளித்தது என்று நினைவுகூர்ந்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top