Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
30
பாக்கிஸ்தானில், இந்துக்களுக்கு பெருமை சேர்த்த சுமன் குமாரி.

SooriyanFM Gossip - பாக்கிஸ்தானில், இந்துக்களுக்கு பெருமை சேர்த்த சுமன் குமாரி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

714 Views
பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள, குவம்பர் சஹாதாகோட் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி என்ற இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தை சேர்ந்த சுமன் குமாரி, குவம்பர் சஹாதாகோட் மாவட்டத்திலேயே நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின் வரலாற்றில் இந்து பெண் ஒருவர் சிவில் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டமை, இதுவே முதல் முறையாகும். சிந்து மாகாணத்தின் ஐதராபாத் நகரில் சட்ட பட்டப்படிப்பை முடித்த சுமன் குமாரி, கராச்சியில் உள்ள ஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.

சுமன் குமாரியின் தந்தையான பவன் குமார் போதன் ஒரு கண் மருத்துவராவார். இதன்போது தனது மகள், அவரின் சொந்த மாவட்டத்திலேயே ஏழைகளுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என தான் விருப்பியதாக தெரிவித்த பவன் குமார் போதன், தற்போது அது சாத்தியமாகி உள்ளது. அவர் சவாலான துறையை தேர்வு செய்திருக்கிறார் என்பதை அறிவேன். எனினும், எனது மகள் நேர்மையுடன், நீதி தவறாமல் பணியாற்றுவார் என நம்புகிறேன்” என மகிழ்வுடன் தெரிவித்தார்.

இந்த நியமனத்தை அறிந்த பலர், தற்போது தமது சமூக வலைத்தளங்களில், இது குறித்து தமது வரவேற்பை வெளியிடுவதுடன், உளமார்ந்த வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top