Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
இளசுகளை கிறங்கடிக்கும் இலியானா - வாய்ப்புத் தருமா கோடம்பாக்கம்......???

Sooriyan Gossip - இளசுகளை கிறங்கடிக்கும் இலியானா - வாய்ப்புத் தருமா கோடம்பாக்கம்......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

565 Views
தென்னிந்தியத் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்த அழகுப் பதுமை இலியானா திடீரென்று பொலிவூட் எனப்படும் இந்தித் திரையுலகம் சென்று நடித்த முதல் படமே வெற்றி படமாக  அமைந்தது.

தனது முதல் படத்திற்குக் கிடைத்த வரவேற்பில் பூரித்துப்போன இலியானா தென்னிந்தியத் திரையுலகை முற்றாக மறந்து போனதுடன், இந்திப் படங்களின் வாய்ப்பு பெருமளவில் கைகூடும் என்று கனவில் மிதந்த அவர், வாய்ப்பைத் தக்கவைக்கும் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறிப்போனார். வெற்றிப் படமாக அவர் நடித்த படம் அமைந்தும் வாய்ப்புகள் மட்டும் நினைத்தபடி அமையவில்லை.

ஹிந்தித் திரையுலகில் தன்னை தக்கவைக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த வாய்ப்புகளை ஏற்று நடித்த இலியானா, தன் கைவசமிருந்த படங்களையும் நடித்து முடித்துக் கொடுத்ததன் பின்னர், தற்போது புதிய படவாய்ப்புக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போகும் இளமை திரும்பாது என்பதை புரிந்துகொண்ட நடிகை இலியானா மீண்டும் தென்னிந்தியத் படங்களில் நடித்து வருமானத்தைப் பேருக்கும் வழியைத் தேடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார். இதற்காக, தென்னிந்தியத் திரையுலகின் பிரபலங்களிடம் தனக்குத் தெரிந்த நண்பர்களை தூதுவிட்டு வாய்ப்பு தேடுவதுடன், தனது அரை நிர்வாண கவர்ச்சி படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களையும் திரையுலகத்தினரையும் தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியிலும் இறங்கியுள்ள நிலையில், தான் எதிர்பார்த்த பலனையும் பெற்றிருக்கின்றார் இலியானா.

திரையுலகில் ஒரு நட்சத்திரத்தைப் பொறுத்தவரைக்கும் நீண்ட இடைவெளியான 6 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2018ம் ஆண்டு "அமர் அக்பர் ஆண்டனி" என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வந்த வாய்ப்பை நடிகை இலியானா ஏற்றுக்கொண்டார். அதாவது, கிடைத்த நூலைப் பிடித்து, அதைப் பயன்படுத்தி ஏற்கனவே தான் விட்டுச்சென்ற கயிற்றைப் பிடித்துவிடலாம் என்று எண்ணத்தில், மெலிந்திருந்த தனது உடற்கட்டை மீண்டும் கொழுக் மொழுக் தோற்றத்துக்கு மாற்றி கவர்ச்சியாக நடனம் ஆடினார். அப்படம் முடிந்து திரைக்கு வந்த நிலையில் இலியானாவின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் வீணாய்ப்போய்விட்டன. கொழுக் மொழுக் இலியானாவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நேர்மறையான விமர்சனங்களை எதிர்பார்த்த இலியானாவுக்கு கிடைத்தது அனைத்தும் எதிர்மறை விமர்சனங்கள் மட்டுமே.

வாய்ப்புத் தேடி எந்தப் பக்கம் ஓடியும் எதிர்பார்த்த வரவேற்புக் கிடைக்காததாலும்,மோசமான விமர்சனங்களாலும் நொந்துபோன இலியானா, சில மாதங்கள் தென்னிந்திய திரையுலக வாய்ப்பிற்காக காத்திருந்த நிலையில், எடுத்த முயற்சிகள் எவையும் கைகூடாத நிலையில் மீண்டும் மும்பைக்கு பறந்துவிட்டார்.

இந்தநிலையில், தற்போது கைவசம் படம் எதுவும் அவரிடம் இல்லாமையினால் இணைய தளப் பக்கத்தில் வலம் வந்துகொண்டிருக்கும் இலியானா, மீண்டும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்புத் தேடி வலை வீசிக்கொண்டிருப்பதுடன் தன்னை ரசிகர்கள் மறந்துவிடாதிருக்க சூடான படங்களையும் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார். இவ்வாறு வெளியான படங்களில் ஒன்றான சிவப்பு நிற பிகினி நீச்சல் உடை அணிந்து இலியானா அண்மையில் வெளியிட்டிருந்த புகைப்படம் இளசுகளை கிளர்ச்சிகொள்ள வைத்துள்ளது என்கிறது கோடம்பாக்கம் காற்று.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top