Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
01
மீண்டும் ஒரு புதுமை செய்த பிரியங்கா சோப்ரா - திரும்பிப் பார்க்கும் திரையுலம்.

Sooriyan Gossip - மீண்டும் ஒரு புதுமை செய்த பிரியங்கா சோப்ரா - திரும்பிப் பார்க்கும் திரையுலம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

153 Views
எதை செய்தாலும் மற்றவர்கள் தம்மைத் திரும்பிப் பார்க்க வைப்பதற்காகவே அதை வித்தியாசமாக செய்வதென்பது இந்தித் திரையுலகான பொலிவூட் நடிகைகளுக்கு கை வந்த கலை. கட்டும் சேலை தொடக்கம் கல்யாணம் வரைக்கும் பரபரப்புச் செய்திப் பசியில் அலையும் ஊடகங்களுக்குத் தீனி போடவும், ரசிகர்கள் எப்போதும் தம்மைப் பற்றியே பேச வைக்கும் வித்தையை கற்றவர்கள் இவர்கள்.

நடிகர் நடிகைகளைப் பொறுத்தவரைக்கும் வாங்கும் கார்கள் முதல் வளர்க்கும் செல்லப்பிராணிகள் வரை ஊடக வெளிச்சத்தில் சிக்கிக்கொள்ளத் தவறிட்டால் மட்டுமே அது செய்தி. அதிலும், நடிகைகள் வளர்க்கும் நாய்களில் ஒன்றாக நாமும் பிறந்திருக்கக் கூடாதா என்று நினைக்கும் அளவிற்கு சொகுசு வாழ்க்கையுடன் கூடிய பிரபலம் பெற்றுவிடுகின்றன நடிகை வீட்டு நாய்கள்.

நடிகைகள் சிலர் தங்கள் செல்லப்பிராணியான நாய்க்கு அதிகமாகவே செல்லம் காட்டுகின்றனர். முத்தமிட்டு கொஞ்சுவது, கட்டிப்பிடித்து தூங்குவது, மடியில் வைத்து விளையாடுவது என பொழுதை கழிப்பதுடன் அதற்கொன பிரத்யேக ஏசி அறை, பஞ்சு மெத்தை, விளையாட்டுப் பொருட்கள் என எல்லா வசதிகளும் செய்து கொடுப்பதற்கும் தவறுவதில்லை. இப்படியான நாய்ப்பிரியை நடிகைகளில் தென்னிந்தியத் திரையுலகில் த்ரிஷா என்றால் இந்தியில் அனைவரும் சுட்டுவது நடிகை பிரியங்கா சோப்ராவைத் தான்.

நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க காதலர் நிக் ஜோனஸை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டதுடன், தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது கணவருடன் குடியேறியிருக்கிறார். இந்தநிலையில், தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்தில், தனது செல்ல நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தன ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

பெரும் விலை மதிப்புமிக்க தனது செல்ல நாய்க்குட்டிக்கு மாத அடிப்படையிலான சம்பளம் பெறும் பிரபல முடி அலங்கரிப்பாளர் ஒருவரை அமர்த்தியிருப்பதுடன், லாஸ் ஏஞ்சல்ஸில் தாங்க முடியாதளவுக்கு தற்போது கடும் குளிரான காலநிலை நிலவுவதால் நாய்க்குட்டிக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஜாக்கெட் ஒன்றையும் தைத்து அணிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. தனது செல்ல நாய்க்குட்டிக்காக அவர் பிரத்தியேகமாக வடிவமைப்பித்த குறித்த ஜாக்கெட்டின் விலை, இந்திய பணமதிப்பில் 40 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இது மட்டுமன்றி, தன்னுடைய செல்ல நாய்க்குட்டிக்கு டயானா சோப்ரா எனவும் பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கின்றாராம் நடிகை பிரியங்கா சோப்ரா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top