பெண்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு அந்நாட்டு மாநிலம் ஒன்றில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளன. துருக்கியில் உள்ள பக்சிலர் மாவட்டதில் மாநகராட்சி அமைப்பு ஒன்று, பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பயிற்சி வகுப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளது.
சுமார் இரண்டு மாதம் நடைபெறும் பயிற்சி வகுப்பு வாரத்துக்கு 2 மணி நேரம் நடைபெறுகிறது. இந்தப பயிற்சி வகுப்பில் பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ள விதிமுறைகள்தான் தற்போது துருக்கியில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில்தான் பெண்கள் நாக்கால் ஐஸ்கீரிமை சாப்பிடக் கூடாது என்று புதிய விதிமுறையை கூறியுள்ளார்கள்.
நமக்கு கேட்கவே ரொம்ப கோபம் வருது இல்லையா? இந்த நிலையில், இது மிகவும் ஆபத்தான போக்கு பெண்கள் ஐஸ் கிரீமை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூற இவர்கள் யார்? நாங்கள் எப்படி இருகிறோமோ அப்படியே எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று துருக்கி பெண்கள் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.