Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
04
இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்....

SooriyanFM Gossip - இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

995 Views
இலங்கையில் 71 ஆவது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இலங்கை ஆரம்ப காலங்களில் பல படையெடுப்புக்களால், அந்நியர்களின் வசமிருந்தது. 1505 ஆம் ஆண்டு, இலங்கைக்கு போர்த்துக்கேயர் படையெத்து இலங்கையை கைப்பற்றினர். அதன் பின்னர்,  1655 ஆம் ஆண்டு, இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சி நிறுவப்பட்டது. அதை தொடர்ந்து 1796 ஆம் ஆண்டு, இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. 

இதுவரைக் காலமும் இலங்கையில் கண்டி ராச்சியத்தை எவராலும் கைப்பற்ற முடியாதிருந்தாலும், ஆங்கிலேயரின் ஆட்சியின் போது, கண்டி ராச்சியமும் அவர்கள் வசமானது.

இதனை அடுத்து ஆங்கிலேயரின் பொருளாதார, அரசியல் நகர்வுகளை எதிர்த்த இலங்கை மக்கள், அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டங்களுக்கு இலங்கையில் பல சிங்கள,தமிழ் தலைவர்கள் துணையாக இருந்தனர். போராட்ட முடிவில் 1948 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, பிரித்தானியர்களின் பிடியிலிருந்து விடுபட்டு, இலங்கை சுதந்திரம் அடைந்தது.

இலங்கை சுதந்திரமடைந்த இன்றைய நாளில், நாடு முழுவதும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. தேசிய சுதந்திர நிகழ்வின் அணிவகுப்பில் பல்லாயிரக்கணக்கான படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வின் பிரதம அதிதியாக, மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்த தேசிய சுதந்திர நிகழ்வுகளை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி முதல், காலி முகத்திடல் வரையான வீதி, முழுமையாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top