Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
04
சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தனுஷ்.

SooriyanFM Gossip - சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தனுஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

694 Views
நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் தனுஷ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததுடன், கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனுஷ் மற்றும் சிம்புவுக்கு இடையில் பல முரண்பாடுகள் நிலவி வருவதாக செய்திகள் வெளிவந்தன. இவர்கள் தமது படங்களில் உள்ள பாடல்கள் மற்றும் வசனங்களை இணைத்தும், இந்த மோதலை வெளிப்படையாக ஊர்ஜிதப்படுத்தி வந்தனர்.

இதனால் இருவரின் ரசிகர்களுக்கும் பகை வளர்ந்து சமூக வலைத்தளத்தில் சண்டையிடும் சம்பவங்களும் நடந்தன.

ஆனால் நிஜத்தில் இருவரும் விரோதம் இல்லாமல் நெருங்கிய நண்பர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரவர் படங்கள் திரைக்கு வரும் போது, வாழ்த்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அடிக்கடி தொலைபேசியில் அழைத்தும் ஏனைய நடிகர்களின் நலம் விசாரித்துக் கொள்கிறார்கள். இதேபோன்று தற்போது தனுஷும் செயல்ப்பட்டுள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற நடிகர் சிம்புவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். சிம்பு ‘கேக்’ வெட்டும் போது அருகில் நின்று கைதட்டி தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். தனுசுக்கு சிம்பு கேக்கும் ஊட்டினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் இருவரின் ரசிகர்களாலும் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஜெயம்ரவி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் நடிகர் சிம்புவுக்கு, சந்தானம் தனது டுவிட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் பல ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top