கரப்பான் பூச்சிகளின் தொல்லை நடு வானத்திலுமா எனத் தோன்றுகிறது இந்த சம்பவத்தினால்.
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிக்கு கொடுக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.
அதைப் பார்த்த பயணி பதறிப்போயுள்ளார்.
அதுவும், இட்லி, சாம்பார், வடை தான் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பசியோடு இருந்தவர் ,அதை வாங்கி சாப்பிட முயன்ற போதுதான், கரப்பான்பூச்சி இருப்பதைக் கண்டு நிலைகுலைந்து போய்விட்டார்.
நடந்த இந்த மிகப் பெரிய தவறுக்காக, ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.