Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
குழந்தைகளின் பார்வை பிரச்னைகளும், கண்ணாடித் தெரிவும்

SooriyanFM Gossip - குழந்தைகளின் பார்வை பிரச்னைகளும், கண்ணாடித் தெரிவும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

346 Views
குழந்தைகளின் பார்வை பிரச்னைகளை நாம் மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டாயம் பெற்றோருக்கு உள்ளது.
 

வருடத்துக்கொரு முறை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். சிறிய பிரச்னையாக இருந்தாலும் அலட்சியம் செய்யாதீர்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். * கிட்டப்பார்வை * தூரப்பார்வை * சிதறல் பார்வை * இரு கண்களிலும் சமநிலையின்மை * ஒரு காட்சியைப் பார்ப்பதில் பார்வையைப் பதிக்க இயலாமை. * மாறு கண் * பார்வையில் தெளிவற்ற தன்மை * குழந்தைக்குத் தலைவலி, கண்கள் சிவந்துபோவது, கண்ணீர் வழிவது போன்ற பிரச்னைகள் தொடர்ந்தால். * குழந்தை ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண்ணால் பார்ப்பது தெரிந்தால், கண் மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.

அத்துடன் கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் தடிப்பான லென்ஸ் உள்ள கண்ணாடியை மருத்துவர் பரிந்துரைக்கிறபோது, கண்ணாடியின் ஃப்ரேம் சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். முழு நேர உபயோகத்துக்கோ, பகுதி நேரத்துக்கோ கண்ணாடி அணிகிற குழந்தைகள் சிறிய அளவிலான கிண்டல், கேலியைச் சந்திக்கவே செய்கிறார்கள்.

குறிப்பாக, முதல் முறை கண்ணாடி அணிகிற குழந்தைகளுக்கு இது மிகப்பெரிய தர்மசங்கடத்தைத் தரும். அதைத் தவிர்க்க அவர்களுக்குப் பிடித்த மாதிரியான ஃப்ரேம்களைத் தேர்ந்தெடுக்கச் செய்யலாம். பிளாஸ்டிக் ஃப்ரேம் பொருத்திய கண்ணாடிகளே குழந்தைகள் கையாள ஏற்றவை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்போது எடை குறைவான உலோக ஃப்ரேம்கள்கூட கிடைக்கிறன. உங்கள் குழந்தைக்கு அலர்ஜி ஏதும் இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு அவற்றை வாங்கித் தரலாம்.

சிறு குழந்தைகளின் மூக்கு முற்றிலும் வளர்ச்சியடைந்திருக்காது என்பதால், கண்ணாடி அணிகின்றபோது பிடிமானமின்றி அது வழுக்கி விழக்கூடும். அதைத் தவிர்க்க Adjustable nose pad வைத்த ஃப்ரேமைத் தேர்ந்தெடுக்கவும். குழந்தைகளுக்கு கண்ணாடிகளை முறையாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தெரியாது.

எனவே லென்ஸ் பகுதியானது சரியான இடத்தில் உட்காரும்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கீழே இறங்கிய கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்யாமல், மேலே உள்ள பகுதி வழியே பார்க்கப்பழகுவார்கள். விளையாடும்போது கண்ணாடி கீழே விழாமல் இருக்க, Cable temples அமைப்புள்ள மொடல்களை தேர்ந்தெடுக்கலாம். இவற்றிலுள்ள பிடிமானமானது கண்ணாடி கீழே விழாமல் பார்த்துக் கொள்ளும். சற்றே வளர்ந்த குழந்தைகளுக்கு கண்ணாடி ஃப்ரேமில் நாடாக்களை இணைத்துக் கொடுக்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top