ஜப்பானின் கடற்கரையில் Rare மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருப்பது அங்குள்ள மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய இயற்கை அழிவிற்கான அறிகுறியாக இருப்பதாக, ஜப்பானிய மக்கள் அச்சம் வெளியிட்டு வருகின்றார்கள்.
அங்குள்ள மக்கள் இந்த அச்சத்துடன் இருக்கும் நிலையில், ஜப்பானிய அரசாங்கம் இது தொடர்பில் எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஜப்பானிய மக்களின் நம்பிக்கையின்படி Rare மீன்களை கடலுக்கு வெளியில் காண்பது அபாயமான ஒரு சம்பவம் நடைபெறவுள்ளதை சொல்லுவதாகவே பார்க்கப்படுகின்றது Rare மீன்கள் சுமார் 3000 அடி ஆழத்தில் வாழும் மீன் வகை ஆகும்.
இந்த ஆழ்கடல் மீன்களைக் கடலுக்கு அடியில் காண்பதே அரிது என்ற நிலையில், கடந்த சில தினங்களாக ஜப்பானிய கடல் கரைகளில் Rare மீன்கள் கரையில் இறந்து கிடப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் வாழும் இவ்வகை மீன்கள் எப்படி கரைகளில் இறந்து ஒதுங்கி இருக்கும் என்ற சந்தேகமும்? இதற்கு அபாயகரமான சம்பவங்கள் நடைபெறுமோ? என்ற அச்சமும் அங்கிருக்கும் மக்களை பீதி அடைய வைத்துள்ளன.
Rare மீன்கள் கரையில் காணப்பட்டால், சுனாமி, நிலநடுக்கம் அல்லது வரவிருக்கும் பேரழிவை குறிப்பதாக ஜப்பானிய மக்கள் நம்புகிறார்கள். இன்னும் மக்கள் புராணக் கதைகள் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்களா? என்ற கேள்வி பலருக்கும் எழும். இதற்கு அங்கு நிகழ்ந்த சில அசம்பாவிதங்கள் வலுவான காரணங்களாக அமைகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டில், ஜப்பானின் டோக்கியோ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 9 ஆகப் பதிவாகியது.
இந்த நிலா நடுக்கம் பதிவாவதற்கு முன்னர் அங்குள்ள இஷிகாவா ப்ரீஃபெக்சர், டோயாமா ப்ரீஃபெக்சர் மற்றும் கியோடோ, ஷிமேன் மற்றும் நாகசாகி ஆகிய இடங்களில் Rare மீன்கள் கரை ஒதுங்கி இருந்ததாக கூறப்படுகின்றது. இது மாத்திரமன்றி பூகம்பம் வரும் முன்பாக விலங்குகள் வித்தியாசமாக நடந்துகொள்ளும் நிகழ்வுகள் பலவும் அங்கு பதிவாகியுள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தையும், சனி கோளின் வளைவுகளையும் ஆராய்வது மட்டுமன்றி பூமியையும் அதன் பாதுகாப்பையும் உறுதி செய்து வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நாசா நிகழ்த்திய ஒரு பருவநிலை சார்ந்த ஆய்வின் முடிவுவில், பூமியின் வெப்பநிலையின் சராசரி அளவானது நீண்டகாலமாக உயர்ந்து வர, அதன் விளைவாக பூமியின் வெப்பநிலை அளவீடுகள் அதிகரிக்கும்.
இந்த அதிகரிப்பானது ஒரு சுழற்சியை போல் செயல்பட்டு பல வகையான விளைவுகளை ஏற்படுத்தி, மீண்டும் மீண்டும் பூமியின் வெப்பநிலையில் அதிகரிப்பை கொண்டு வரும். இதனை நாம் புவி வெப்பமடைதல் என்கிறோம். ஆக, எதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்த்து விடுமோ என்ற அச்சம் ஜப்பானியர்கள் மத்தியில் வந்ததற்கு இதைவிட வலுவான காரணம் வேறு ஒன்றும் இல்லை.