Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
தன்னை கணவரோடு சேர்த்து வைக்க வேண்டுமென கோரி, வீட்டின் முற்றத்தில் கைக்குழந்தையுடன் போராடும் பெண்.

SooriyanFM Gossip - தன்னை கணவரோடு சேர்த்து வைக்க வேண்டுமென கோரி, வீட்டின் முற்றத்தில் கைக்குழந்தையுடன் போராடும் பெண்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,160 Views
எப்படியாவது தன்னை கணவரோடு சேர்த்து வைக்குமாறு கோரி, பெண்ணொருவர் வீற்றின் முற்றத்தில் கைக்குழந்தையுடன் போராடி வருகின்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின்  மேற்கு முகப்பேர் தச்சு தெருவில் பதிவாகியுள்ளது. 

குறித்த பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற 35 வயதான நபருக்கும், பிரணிதா என்ற 32 வயதான பெண்ணுக்கும் திருமணம் கோலாகலமாக இடம்பெற்றது. தற்போது இவர்களுக்கு ரோகித் என்ற 9 மாத கைக் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில் பிரணிதா ஒரு வாரத்துக்கு முன்பு, அம்பத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று அங்கு சில நாட்கள் தாய், தந்தையுடன் இருந்து விட்டு, பின்னர் தனது குழந்தையுடன் கணவர் வீட்டுக்கு திரும்பினார்.

பிரணிதாவை பாதுகாப்பாக கணவரிடம் ஒப்படைப்பதாக, அவருடைய தந்தை பாலகண்ணனும் உடன் வந்தார். ஆனால், கணவர் தினேசும், வீட்டில் இருந்தவர்களும் பிரணிதாவை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் பிரணிதா தனது 9 மாத கைக் குழந்தை ரோகித்துடன், கணவர் வீட்டின் முன்பு தரையில் உட்கார்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார். அத்துடன் அவருடைய தந்தை அங்கு நின்று கொண்டிருந்தார்.

இந்த செய்தியை அறிந்து கொண்ட அப்பகுதி காவல்துறையினர், அங்கு சென்று, கணவன் – மனைவியை சமசரம் செய்து சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top