Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! காரணம் கண்டறியப்பட்டது.

SooriyanFM Gossip - பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை! காரணம் கண்டறியப்பட்டது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,095 Views
அண்மைக்காலமாக சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை குறித்த செய்திகள் அதிகமாக வெளிவருகின்றன. நேரம் பாராது   படப்பிடிப்புக்களில்  கலந்து கொள்வது, அதனால் ஏற்படும் சோர்வு, வேலை சுமையால் இவர்கள்,  தன்னுடைய மனநிலை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள்ளேயே வைத்து கொள்வதால், மன உளைச்சல் அதிகரித்து தற்கொலைக்கு தூண்டப்படுவதாக, சின்னத்திரை நடிகர்களின் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்த மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த பட்டியலில் தற்போது தெலுங்கு சின்னத்திரை நடிகை ஒருவரும் உள்வாங்கப்பட்டுள்ளார். தெலுங்கு சின்னத்திரையில் ஒளிபரப்பட்ட பிரபல நாடகமொன்றின் நடிகை ஜான்சி என்பவர், நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவரது மரணத்தை அடுத்து தற்போது தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளின் அடிப்படையில், ஜான்சியின் தற்கொலைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது. ஜான்சி, சில வருடங்களாக சூர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் அவ்வபோது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சூர்யா, ஜான்சியிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். ஜான்சி பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும், காதலன் சூர்யாவிடம் இருந்து, எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இதனால் மனமுடைந்த ஜான்சி, சில நாட்களாக மிகுந்த மன வேதனையுடன் இருந்ததாக தெரியவருகிறது. நாளாக நாளாக, ஜான்சியின் மன உளைச்சல் அதிகரித்ததை அடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர், ஜான்சியின் வீட்டிற்கு விரைந்து வந்து, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் ஜான்சியின் கைத்தொலைபேசி மற்றும் கைக்கணினி உள்ளிட்ட பல பொருட்களை சேகரித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ''பிரச்சனைகளுக்கான தீர்வு ஒருபோதும் தற்கொலையாகாது'' என்பதை உணர்ந்த யாரும், இத்தகைய கோழைத்தனமான செயலை செய்யவே மாட்டார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top