Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
ஜெனிலியா வரைந்த காதல் மடல் - கணவர் சொல்லப் போவது என்ன.....???

Sooriyan Gossip - ஜெனிலியா வரைந்த காதல் மடல் - கணவர் சொல்லப் போவது என்ன.....???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,165 Views
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களை தனது துறு துறுப்பான, சுட்டித்தனம் நிறைந்த நடிப்பால் தன்பக்கம் ஈர்த்து வைத்திருந்தவர் நடிகை ஜெனிலியா. தற்போது, திருமணமாகி குழந்தை, குடும்பம் என வாழ்க்கையின் பிரதானமான நிலைக்குள் ஒதுங்கிவிட்டாலும் அவரைப்பற்றிய விஷயங்களை அடிக்கடி அறிந்துகொள்வதற்குத் தவறுவதில்லை ஜெனிலியா ரசிகர்கள்.

பொதுவாக நடிகைகளை பொறுத்தவரைக்கும் ஆண் ரசிகர்களையே அதிகம் கவர்ந்திருப்பர். இருந்தும் "சந்தோஷ் சுப்ரமணியும்" திரைப்படத்தில் நடிகை ஜெனிலியாவின் அப்பாவித்தனமான, வெகுளியான நடிப்பைப் பிடிக்காத ரசிகர்களே இல்லை எனலாம். சில காலத்துக்கு முன்னர்வரை பல இளம்பெண்களின் Facebook முகப்புப் படங்களை அலங்கரித்த ஒரு நடிகை என்றால் அது ஜெனிலியா தான். திரையில் வரும் வெகுளித்தனமான ஜெனிலியாவாக தம்மையும் உருவாக்கப்படுத்துமளவுக்கு பல இளம்பெண்களின் இதயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது அவரது நடிப்பு.

இந்த நிலையில் திரையுலகில் பிரபல பெண்நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருந்தபோதே 2012ம் ஆண்டு இல்லற பந்தத்தில் இணைத்துக்கொண்டு நடிப்பிற்கு முழுக்குப்போட்டுக்கொண்டார் ஜெனிலியா. தனது நீண்ட நாள் காதலரும் ஹிந்தி நடிகருமான ரித்தேஷ் முக் என்பவரை கரம்பற்றி 7 ஆண்டுகளை கடந்து மணவாழ்வில் மகிழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், தமது திருமணநாளை அண்மையில் இருவரும் கொண்டாடினர். அந்த இனிய நாளில் காதல் கணவர் ரித்தேஷுக்கு ஜெனிலியா வரைந்த காதல் ரசம் சொட்டும் கடிதம் எல்லோரையும் கவர்ந்திருக்கின்றது.

கணவருக்கு வரைந்த கடிதத்தில், "ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வாய்க்கும் துணை எப்படிப்பட்டவராக அமையப்பெற்ற வேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்பு வைத்திருப்பர். ஆனால் எனக்கு அப்படியொரு எண்ணம் இருந்ததில்லை. அதற்கு காரணம் எனது கணவர் ரித்தேஷ், எமது திருமணத்துக்கு முன்னரே என் மிகச்சிறந்த நண்பராக வாய்த்திருந்தார். எனக்கு தோள்மீது சாய்ந்து அழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போதெல்லாம் எனக்குத் தோள் கொடுப்பவராக ரித்தேஷ் இருக்கிறார். வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதைப்பற்றிய கவலை தோன்றவிடாமல் என்னை சிறப்பாகப் கவனித்துக்கொள்கின்றார்.

எதிர்காலம் பற்றிய எந்தக் கவலைகளும் இல்லாமல் நான் என்றைக்கும் சந்தோஷமாக இருக்கிறேன் என்றால், அது என் கணவர் ரித்தேஷ் காட்டும் அன்பு நிறைந்த அக்கறையினால் தான். இந்த உறவுடன் நாங்கள் வாழ்க்கை முழுவதும் நீடித்திருப்போம். நான் மகிழ்ச்சியுடன் வாழ ரித்தேஷ் அவசியம் தேவை. ஐ லவ் யூ ரித்தேஷ்.மேலும் பல கோடி சந்தர்ப்பங்களில் சந்தோஷமாக சிரித்து மகிழவும், ஒருவர் கண்ணீரை ஒருவர் துடைத்துக் கொள்ளவும், பலவீனமான நேரத்தில் ஒருவரையொருவர் உயர்த்திக்கொள்ளவும் வாழ்க்கை முழுவதும் நாம் ஒன்றாகவே இணைந்திருப்போம்" என மனம் உருகியிருக்கின்றார் நடிகை ஜெனிலியா.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top