Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
உயிருக்கு உயிராக பழகிய, இளம் காதல் ஜோடிகள் பரிதாபமாக பலி.

SooriyanFM Gossip - உயிருக்கு உயிராக பழகிய, இளம் காதல் ஜோடிகள் பரிதாபமாக பலி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,140 Views
இந்தியாவைச் சேர்ந்த இளம் காதல் ஜோடிகள், தற்கொலை செய்து கொண்டதை  அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் வசித்து வந்த காதல் ஜோடிகளே, இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் - வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்த 22 வயதான அஜித் என்ற நபர், கட்டட தொழில் செய்து வந்துள்ளார். இவரது உறவினர் பெண்ணான அதே பகுதியை சேர்ந்த 17 வயதான ஆனந்தி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரது காதலை அனந்தியிடம் சொல்ல, அனந்தியும் சம்மதம் கூறியுள்ளார்.

இருவரது வீட்டிலும் இந்த காதல் விவகாரம் தெரிய வந்துள்ளது. ஆனந்திக்கு திருமண வயது ஆகாததால், இவர்களது வீட்டில் இது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், இந்த காதல் ஜோடிகள் தற்கொலை சித்து கொள்ள முடிவெடுத்தனர். இதன்படி, நேற்று அஜித் அரளிக்காயை பறித்து, ஆனந்திக்கு கொடுத்து விட்டு தானும் அரைத்து உண்டு, அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள சுடுகாட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அஜித் மயங்கி கிடந்ததை கண்டபொது மக்கள் சிலர், அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நேரத்தில் ஆனந்தியும் அவரது வீட்டில் அரளிக்காயை தின்று விட்டு உயிரிழந்தார்.

காதலர்கள் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரது உடலங்களும், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top