Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
தலைகீழாக மாறப்போகும் பூமி - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை.

SooriyanFM Gossip - தலைகீழாக மாறப்போகும் பூமி - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,266 Views
உலகளாவிய ரீதியில் பூமி குறித்து, பல்வேறுபட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பூமி குறித்து அண்மையில், ஆய்வில்  இருந்து பெறப்பட்ட ஒரு அதிர்ச்சிகர முடிவொன்று வெளியிடப்பட்டுள்ளது.  பூமிப் பந்தின் வட துருவ காந்தப் புலம் தொடர்ந்து நகர்ந்து  வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து பூமியின் காந்தப் புலங்கள் தலைகீழாகி வருவதற்கான அறிகுறிகள், தெரியவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பூமியின் வட துருவத்தில் காந்தப் புலம், தற்போது விரைவாக மாற்றம் அடைந்து வருவதால், இது குறித்து அவதானம் தேவை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமியின் காந்தப் புலங்கள் 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன், தலைகீழாக மாறியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போல, காந்தபுலம் தலைகீழாகி வருவதற்கான அறிகுறிகள் தெரியவதாக ஆராய்ச்சியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் பூமிப் பந்தின் வட துருவ காந்தப் புலம் தொடர்ந்து நகர்ந்து வருவதால், தலைகீழாக பூமி செயல்படக்கூடும் அபாயம் உள்ளது. 1881ஆம் ஆண்டில் வட புலம், துல்லியமாக குறிக்கப்பட்டது. ஆனால், அப்போதிருந்தே அது ஒரு ஆண்டுக்கு, 10 கி.மீ அளவில் இடம்பெயர்ந்து வருவதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனினும் இந்த வேகம், கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிகரித்த போக்கை காட்டியுள்ளது. ஆண்டுக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வரை, வட காந்தப் புலம் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திசைகாட்டிகளில், (compass) மாற்றம் ஏற்படத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை தற்போது மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அடுத்து வரும் 2020ஆம் ஆண்டில் உலக காந்த திசைகாட்டி மாதிரியின் ஐந்தாண்டு , புதுப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top