Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
வேகமாக பரவி வரும் அம்மை நோய்!

SooriyanFM Gossip - வேகமாக பரவி வரும் அம்மை நோய்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

386 Views
அதிகரித்துவரும்  வெப்பநிலை  காரணமாக உலக நாடுகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளன.  ஒருபக்கம் பனிக்கட்டிகள் உருகுவதால்  கடல் மட்டம் அதிகரித்து செல்வதோடு, வறட்சியும்  தாண்டவமாடுகிறது.  அத்தோடு சேர்த்து மக்கள் நோய் வாய்ப்படுகின்றமையும் மிகுந்த கவலையளிக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் வேகமாக பரவி வரும் அம்மை நோயால் நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலா உட்பட பல்வேறு இடங்களில் இந்த ஆண்டின் துவக்கம் முதலே அம்மை நோய் பரவி வருகிறது. இதில் ஏராளமானோர் அம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 1813 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 26 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த வைரஸினால் முதலில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். பின்னர் கண்களில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, உடலின் அனைத்து இடங்களிலும் சிவப்பு நிறத்தில் தடித்து இருக்கும். இவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.
இந்த அம்மை நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 74% அதிகமாகும்.

குறிப்பாக இந்த அம்மைநோய்க்கான வைரஸ், குழந்தைகள் மற்றும் சிறுவர்களை வேகமாக தாக்கக்கூடியதாகும். அனைத்து குழந்தைகளும் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகும். ஆனால் டெங்கு தடுப்பூசி போடப்பட்டபோது ஏற்பட்ட பக்கவிளைவுகளைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் 2.4 மில்லியன் குழந்தைகள் நோய்த்தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதையடுத்து தற்போது 95% நோய்தடுப்பு வீதம் குறைந்துள்ளது என பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி Dr குண்டோ வெயிலர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top