Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
இறுதிச் சடங்கில், பெண்கள் அனுமதிக்கப்படாமைக்கான அதிரவைக்கும் காரணம் இதோ.

SooriyanFM Gossip - இறுதிச் சடங்கில், பெண்கள் அனுமதிக்கப்படாமைக்கான அதிரவைக்கும் காரணம் இதோ.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,931 Views
இந்தியா, இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் இடம்பெறும்  இறுதிக் கிரியைகளின் போது, பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு  பல அதிரவைக்கும்  காரணங்கள் உள்ளதாக, முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். 

பெண்களுக்கு சம உரிமை என்பது, இன்றும் கூட பல விஷயங்களில் கானல் நீராகவே உள்ளது. குறிப்பாக பெண்கள் சில கோவில்களுக்குள் செல்லக் கூடாது, சில கடவுளை வணங்கக் கூடாது, சில இடங்களுக்கு செல்லக் கூடாது என பெண்களுக்கான கட்டுப்பாடுகள் இன்றும் நீடித்து கொண்டுதான் செல்கின்றன. இந்த பட்டியலில், இறுதிச் சடங்கின் போது, பெண்கள் கலந்து கொள்ளக்கூடாது என்பதும் உள்ளடங்குகிறது.

பெண்கள் இறுதிச் சடங்குகள் செய்வதையோ, பிணத்தை சுமந்து செல்வதையோ, ஏன் பிண ஊர்வலத்தில் கலந்து கொளவதையோ தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்கள். சுடுகாட்டிற்கு வரவோ, கொள்ளி வைக்கவோ பெண்களுக்கு பழங்காலம் முதலே அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு பின்னால் பல அதிர்ச்சிகரமான காரணங்கள் உள்ளன.

சுடுகாட்டில் பிணத்தை எரிப்பது ஒருவரின் ஆன்மாவை, உடலில் இருந்து பிரித்து மேல் உலகதிற்கு அனுப்பி வைக்கும் புனிதமான சடங்காக கருதப்படுகிறது. இதன்மூலம் அந்த ஆன்மா மீண்டும் பிறக்க இயலும் என்று பழங்காலம் முதல் நம்பப்படுகிறது. மற்றொரு நம்பிக்கை என்னவெனில், இறுதிச்சடங்கின் போது ஏதவாது தவறு நேர்ந்து தொந்தரவு ஏற்பட்டால், அந்த ஆன்மா நிம்மதியை இழந்து அமைதியின்றி அலையும் என்று கருதுவதுண்டு.

இந்து கலாச்சாரத்தின் படி ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டு அவர்களின் சாம்பல், புனித நீரில் கரைக்கப்பட வேண்டும். பாரம்பரியமாக பெண்கள் இந்த இறுதிச்சடங்குளை செய்வது, பிண ஊர்வலத்தில் கலந்து கொள்வது, சுடுகாட்டிற்கு வருவது போன்ற சடங்குகளில் இருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர்.
பெண்கள் ஏன் இறுதி சடங்குகளில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை ஆராய, ஆராய்ச்சியாளர்கள் முயன்ற போதும் அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் புராணகாலங்களில் பெண்கள் இறுதிச்சடங்குகளில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மஹாபாரத போரில் இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்த போது பாஞ்சாலி, குந்தி முதற்கொண்டு அனைத்து பெண்களும் அங்கு இருந்ததாகவே கூறப்படுகிறது. பீஷ்மரின் இறுதிச்சடங்கின் போது பாண்டவர் மற்றும் கௌரவரின் இரு புறத்திலும் இருந்த அனைத்து பெண்களும் கலந்து கொண்டனர்.

இறந்தவரின் சொத்திற்கு உரிமை கொண்டாட வேண்டுமெனில், அவர்களே இறுதிச்சடங்கை வழிநடத்த வேண்டும் என்றும், கொள்ளி வைக்க வேண்டுமென்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பண்டைய காலங்களில் பெண்களுக்கு சொத்தில் உரிமை இல்லாமல் இருந்தது. இப்போது சொத்தில் உரிமை கிடைத்தாலும், இந்த சடங்குகளில் பெண்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.

சில வேளைகளில் இறந்தவர்களுக்கு மகனோ அல்லது நேரடி ஆண் வாரிசோ இல்லையென்றால் கூட, குடும்பத்தில் மூத்தவர்களின் மனைவியையோ அல்லது மகளையோ கொள்ளி வைக்க விடாமல் தூரத்து சொந்தத்தை தான் கொள்ளி வைக்க விடுவார்கள்.

தமிழ் கடவுள்களில் அதிகமாக பெண்களே உள்ளமையால், சுடுகாட்டிற்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகின்றது. அத்துடன் சுடுகாட்டில் பல பேய்கள் கண்ணுக்கு தெரியாமல் உலாவுவதாக பலர் கூறுவார்கள். அந்த பேய்கள் முதலில், பெண்களையே சென்றையும் என்ற நம்பிக்கை, ஆரம்ப காலம் முதல் கடைபிடிக்கப்படுவதால், பெண்கள் சுடுகாட்டிற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

மாரடைப்பு, ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சுடுகாட்டில் எமது உறவுகள் புதைக்கப்படும் போது, அதனை பெண்களால் எளிதில் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அவர்கள் திடீரென்று உணர்ச்சிவசப்படும் வாய்ப்புக்கள் உள்ளமையால், அவர்களை சுடுகாட்டிற்கு அனுமதிப்பதில்லை.

பெண் பாவம் பொல்லாதது என்று கூறுவார்கள். சில வேளைகளில் மரணித்தவர்கள், ஏதேனும் பாவங்களை செய்து, பெண்களால் சாபத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டால், சுடுகாட்டில் வைத்து, அந்த ஆன்மா சாந்தி அடையாது என்று கூறப்படுவதால், பெண்கள் சுடுகாட்டிற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அத்துடன் அடுத்த பிறவியில், பெண்கள் சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்களாகவே, மீண்டும் உயிர் பெறுவார்கள் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அதன் காரணமாக பெண்கள் சுடுகாட்டிற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த காரணங்களை விட பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அதனால் தான் பெண்களை சுடுகாட்டிற்கு அழைத்து செல்வதில்லை. ஆனால் ஆண்களை விட பெண்கள், மனதளவில் மிக மிக வலிமையானவர்கள் என்பதை மறுத்து விட முடியாது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top