Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
விவாகரத்து செய்யாமலேயே, அடுத்த திருமணம் செய்து கொண்ட முகேஷுக்கு பதிலடி கொடுத்த சரிதா.

Sooriyan Gossip - விவாகரத்து செய்யாமலேயே, அடுத்த திருமணம் செய்து கொண்ட முகேஷுக்கு பதிலடி கொடுத்த சரிதா.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,358 Views
விவாகரத்து செய்யாமலேயே அடுத்த  திருமணம் செய்து கொண்டதாக, நடிகர் முகேஷ் மீது, அவரது மனைவியான பிரபல  நடிகை சரிதா குற்றம் சுமத்தியுள்ளார். 

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த சரிதா, மலையாள நடிகர் முகேஷை காதல் திருமணம் செய்து பின்னர் பிரிந்து விட்டார். தற்போது துபாயில் வசிக்கும் சரிதா, அண்மையில் ஐதராபாத் வந்த போது தனது குடும்பம் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார்.

''நான் இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பாலசந்தர், மரோசரித்ராவில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க சுமார் 180 பேரை நிராகரித்து என்னை தெரிவு செய்தார். இதனை அடுத்து அந்த படம் வெளியான முதல் வாரத்தில், சரியாக வசூலை பெறவில்லை. இதற்கான காரணம், நான் கறுப்பாக உள்ளமையே என, பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். எனினும் அடுத்த வாரத்தில் இருந்து, அதே படம் நன்றாக ஓடியதும் என்னை பாராட்டினார்கள்.

இப்போது திரையில் வராமல் இருந்தாலும், பின்னால் இருந்து நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன். நதியா, தபு, சௌந்தர்யா, விஜயசாந்தி, நக்மா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலருக்கு குரல் கொடுத்துள்ளேன். திருமணத்துக்கு பிறகு குழந்தைகளை வளர்ப்பதற்காக, நடிப்பில் இருந்து விலகினேன். மகளிர் மட்டும் படத்தில் நடிக்கும் படி கமல்ஹாசன் வற்புறுத்தியும் மறுத்தேன்.

இதேவேளை எனது கணவர் முகேஷ் எனக்கு ஆதரவாக இல்லை. அவர் எனக்கு சரியானவர் இல்லை என்பது தாமதமாகத் தான் தெரிந்தது. அன்பு, நேசிப்பு, எதுவும் அவரிடம் கிடையாது. ஆனாலும் எங்கள் இருவருக்கும் இடையில் கடவுள் தங்கம் மாதிரி, இரண்டு குழந்தைகளை கொடுத்துள்ளார்.

இப்போது எனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே, முகேஷ் வேறு திருமணம் செய்து கொண்டார். குறிப்பாக மோசடி செய்து விவாகரத்து பத்திரம் வாங்கி கொண்டார். இந்த விஷயத்தில் நான் முறைப்பாடு செய்திருந்தால், 7 வருடம் அவர் சிறையில் தண்டனை அனுபவித்திருப்பார். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. அவர் செல்வாக்கு மிகுந்த மனிதர். வழக்கு தொடர்ந்தாலும் அவரை என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ கேரளாவில் என்னை எதுவும் செய்ய முடியாது என்று நேரடியாக சவால் என்னிடம் விட்டார்.

காவல்துறையில் முறைப்பாடு கொடுத்தும் பயன் இல்லை. அதன் பிறகு அந்த விஷயத்தை கடவுளிடமே விட்டு விட்டேன். என் 2 பிள்ளைகள் தான் எனது தைரியம். அவர்களுக்காக மட்டுமே நான் வாழ்கிறேன். ஒரு மகன் மருத்துவர். இன்னொரு மகன் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவர்களுக்கும் சினிமாவில் ஆர்வம் இருக்கிறது. இருவரும் விரைவில் கதாநாயகர்களாக நடிப்பார்கள். இதுவே எனது கணவருக்கு சிறந்த பதிலடியாக இருக்கும்'' என, நடிகை சரிதா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top