Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
பெற்ற தாய் முன், துடிக்க துடிக்க கொல்லப்பட்ட சிறுவன்.

Sooriyan Gossip - பெற்ற தாய் முன், துடிக்க துடிக்க கொல்லப்பட்ட சிறுவன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,657 Views
முஸ்லிம்கள் செறிந்து வாழும் சவூதி அரேபியாவில், சன்னி மற்றும் ஷியா பிரிவு ஆகிய முக்கிய இரு இனங்கள் உள்ளன. இஸ்லாமியர்களைப் பொறுத்த வரை சன்னிதான் மிகப்பெரும் பிரிவு. முகம்மது நபியின் வழிமுறையைப் பின்பற்றும் மக்கள் இந்தப் பிரிவைக் கடைப்பிடிப்பார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ளவர்களே ஷியா பிரிவினர். இவர்கள் முகமது நபியின் மருமகன் தான் அடுத்த வாரிசு என கருதுகின்றனர். சவூதி அரேபியாவில் உள்ள அதிகமான மக்கள் ஷியா அமைப்பைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி, சவுதி அரேபியாவின், மதினா நகரில் உள்ள நபிகள் நாயகம் மசூதிக்கு, ஸகாரியா அல் ஜபிர் என்ற 6 வயதுச் சிறுவன், தன் தாயுடன் தொழுகைக்காக சென்றுள்ளார். இது சன்னி அமைப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தொழுகை முடித்து சிறுவனும், தாயும் தனது காரில் ஏறிப் புறப்பட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் கார் ஓட்டுநர் சிறுவனின் தாயிடம், நீங்கள் ஷியா பிரிவா? எனக் கேட்டுள்ளார். அதற்குத் தாயும் ஆம் என பதிலளித்துள்ளார். அடுத்த சில நொடிகளில் காரை நிறுத்திய ஓட்டுநர், தாயிடம் இருந்த குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து, காரிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

பின்னர் சாலையில் கிடந்த கண்ணாடி போத்தலை உடைத்து அதிலிருந்து கூர்மையான கண்ணாடியின் ஒரு பகுதியினால், சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். சன்னி பிரிவின,ர் தொழுகை செய்த இடத்துக்கு ஷியா பிரிவைச் சேர்ந்த சிறுவன் சென்றதால், அவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top