Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
மரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.

SooriyanFM Gossip - மரணிப்பதற்கு முன், அடில் அனுப்பிய இறுதி செய்தி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,665 Views
நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இலங்கையின் அரசியல் தலைவர்களும், தமது கண்டனத்தை வெளியிட்டனர். 

இந்த தாக்குதல் தீவிரவாதிகளால், அந்த நாட்டு காவல்துறையின் மீது நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து அந்த நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தாக்குதலில் முக்கிய சூத்திரதாரி, அடில் அகமட் தார் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த தீவிரவாதி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு முன்னர், அடில் அகம்து தார், பேசிய வீடியோ இணைப்பு ஒன்று, சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில், "எனது பெயர் அடில், நான் சமீபத்தில் தான் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்தேன். இந்த அமைப்பில் சேர்ந்த ஒரு சில மாதங்களில் இந்த தாக்குதல் நடத்தும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன்பாக, நான் சொர்க்கத்தில் இருப்பேன். இது தான் காஷ்மீர் மக்களுக்கு எனது கடைசி மெசேஜ்" என்று பதிவாகியுள்ளது.

இந்த காணொளியை பார்த்த பலர், பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top