Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
காதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்!

SooriyanFM Gossip - காதலர் தினத்தன்று, அன்பு மனைவியின் இதயத்தை தானம் செய்த கணவர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,810 Views
பலராலும் கண்ணீருடன் பேசப்பட்ட ஒரு உண்மைச் சம்பவம் தற்போது, சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. காதலர் தினமன்று தனது அன்பு மனைவியின் இதயத்தை, தானம் செய்த கணவரைப் பற்றிய செய்தியே அதுவாகும். 

இந்தியாவின் வேலூர் மாவட்டத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வேலூரிலுள்ள புவனகிரி கிராமத்தை சேர்ந்த ஒருவர், ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கோகிலா அண்மையில் கர்ப்பம் தரித்துள்ளார். இதனை அடுத்து கோகிலாவை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவரது உடலில் இரத்த அணுக்கள் குறைவாக உள்ளமை தெரிய வந்தது.

இந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோகிலாவின் குழந்தை ஒரு வாரத்திற்கு முன்பு, அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. இருப்பினும் தாய் கோகிலாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த போது, அவர் மூளைச்சாவு அடைந்தமை தெரிய வந்தது. இந்த தகவல் அறிந்த கணவர் துடித்துப்போனார். எனினும் ஒருவாறு தனது மனதை ஒருநிலைப்படுத்திய அவர், அன்பு மனைவி கோகிலாவின் மனைவியின் உடல் உறுப்புகளை காதலர் தினமான நேற்று தானமாக வழங்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

குறிப்பாக மனைவியின் இதயத்தை, இதயம் செயலிழந்த ஒருவருக்கு பொருத்த வேண்டும் என்று, அவர் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கோகிலாவின் உடல் உறுப்புகள் இதயம், நுரையீரல், கணையம், உள்ளிட்ட 5 உடல் உறுப்புகளை தானமாக வழங்க, அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கோகிலாவின் உடல் உறுப்புகளை சட்டத்திற்கு உட்பட்டு, அதனை அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டன. காதலர் தினத்தன்று மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தையே தானமாக வழங்க முன்வந்த நபரை, தற்போது பலர் கண்ணீருடன் பாராட்டி வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top